Wednesday, May 24, 2023

புதன் 5 நிமிடம், வியாழன் 5 நிமிடம்

 



"பாலாற்றை பாதுகாப்போம், மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாப்போம்"  என்ற முழக்கத்தோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேலூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் பத்து முதல் பதினான்கு  வரை இரு சக்கர வாகனப் பிரச்சாரம் நடத்தியது.  

அந்தப் பிரச்சாரத்தின் நிறைவாக ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் மாநிலங்களவை உறுப்பினருமான தோழர் டி.கே.ரங்கராஜன் அக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் தகவல் சொன்னார்.

பிரதமராக உள்ள நரேந்திர மோடி 

ஒவ்வொரு புதன் கிழமையும் சரியாக மாலை ஐந்து மணிக்கு மக்களவைக்கு வருவார். ஐந்தே ஐந்து நிமிடம் மட்டும் இருக்கையில் அமர்ந்து விட்டு போய் விடுவார்.

அது போல ஒவ்வொரு வியாழக் கிழமையன்றும் மாலை ஐந்து மணிக்கு மாநிலங்களவைக்கு வருவார். அங்கும் வெறும் ஐந்து நிமிடம் அமர்ந்து விட்டு புறப்பட்டு விடுவார்.

மக்களவை மாநிலங்களவை என்ற பேதம் அவருக்குக் கிடையாது. ஒரு வாரத்துக்கு நாடாளுமன்றத்திற்காக அவர் ஒதுக்குவது வெறும் பத்து நிமிடங்கள் மட்டுமே.

இதுதான் அவர் நாடாளுமன்றத்திற்கு அளிக்கும் ம்ரியாதை. இந்த லட்சணத்தில் அவை நடந்தால் என்ன, முடங்கினால் என்ன?

மேலே உள்ளது 18.05.2015 அன்று எழுதிய பதிவு. நிலைமையில் எட்டு வருடங்களாகியும் மாறவில்லை.

அதனால் மிஸ்டர் டிமோ, 

உமக்கு பிடிக்காத ஒரு இடம், 

நீர் போகாத ஒரு இடம், 

அதற்கு எதற்கய்யா புதுக் கட்டிடம்? 

1 comment:

  1. நாடாளுமன்ற வாசல் படியில் முத்தமிட்ட போதே உமக்கு புரிஞ்சிருக்கணும்!
    உண்மையிலேயே சிறந்த நடிகன்னு இப்பவாவது ஒத்துக்கோங்க!!

    ReplyDelete