Wednesday, May 17, 2023

நந்தவனத்து ஆண்டியாகாதீர் காங்கிரஸாரே!

 


வாராது வந்த மாமணியாய் வந்துள்ளது கர்னாடகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ள வெற்றி.

முடிவுகள் வந்த சனிக்கிழமையன்று பெங்களூரில்தான் இருந்தேன். பெரிய அளவில் வெற்றிக் கொண்டாட்டங்கள் எதுவும் கண்ணில் படவில்லை. 

நாங்கள் அன்று சென்ற ஓலா டாக்ஸியின் ஓட்டுனர், பயண நேரம் நாற்பத்தி ஐந்து நிமிடம் முழுதும் பாஜகவின் தோல்வி குறித்து யாரிடமோ அலைபேசியில் புலம்பிக் கொண்டே வந்தார். ஸ்ரீராமுலுவை முதல்வர் வேட்பாளர் என்று சொல்லியிருந்தால் கோடிக்கணக்கில் பணத்தை வாரி விட்டு  பாஜகவை ஜெயிக்க வைத்திருப்பார். யெடியூரப்பாவை விட அவர் ஒன்றும் ஊழல் பேர்வழி கிடையாதே என்றெல்லாம் அவர் புலம்பல் அமைந்திருந்தது.

ஆனாலும் அவரிடம் ஒரு நம்பிக்கையும் இருந்தது. காங்கிரஸ் கட்சியினர் சண்டை போட்டுக் கொண்டு ஆட்சியை ஒரு வருடத்தில் நம்மிடமே கொடுத்து விடுவார்கள் என்பது அவரது நம்பிக்கை. கர்னாடகத்திலும் ஏக்நாத் ஷிண்டே கிடைப்பார் என்பது மத்யமர் ஆட்டுக்காரன் குழு சங்கிகளின் நம்பிக்கை.

இந்த நம்பிக்கை நிஜமாகிடுமோ என்ற அச்சத்தை முதல்வர் தேர்வுக்கான இழுபறி அளிக்கிறது.

பாஜக தோற்க முடியாத கட்சி அல்ல என்ற நம்பிக்கையை நாடு முழுவதற்கும் அளித்தது கர்னாடக வெற்றி.

நந்தவனத்து ஆண்டி போல இந்த வெற்றியை போட்டுடைத்தால் அதன் பாதிப்பு நாடு முழுதும் எதிரொலிக்கும்.

ஆகவே காங்கிரஸாரே, பெற்ற வெற்றியை தக்க வைக்க உங்கள் கட்சிக்குள் ஒற்றுமையை முதலில் தக்க வையுங்கள்.

2024 ஐ மனதில் கொண்டு செயல்படுங்கள்.


1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete