புமா ஆஜானே வேற எழுத
விடய்யா!
இரண்டு நாட்களில் ஆஜானைப் பற்றிய மூன்றாவது பதிவு இது. ஆஜானை
பற்றி எழுத எனக்கும் அலுப்பாகத்தான் இருக்கிறது. நீதிபதிகள் நியமனம் பற்றி எழுதிய ஒரு
பதிவு மூன்று நாட்களாக ட்ராப்டிலேயே இருக்கிறது. இந்தியில் பேசினால் பாலியல் கொடுமை
நடக்காது என்று முட்டாள்தனமாக பேசிய சங்கி அம்மணி ஒரு போலி மருத்துவர் என்பதால் கைது
செய்யப்பட்டது. கல்விக்கடன் தர மறுத்த ஹெச்,டி,எஃப்.சி வங்கியின் முதலீடு செய்யப்பட்டிருந்த
50 கோடி ரூபாய் மதுரை ஸ்மார்ட்சிட்டி நிதியை வேறு வங்கிக்கு மாற்றுவது என்ற மதுரை எம்.பி
தோழர் சு.வெங்கடேசனின் அதிரடி முடிவு போன்றவற்றை
பதிவிட முடியாத அளவிற்கு ஆஜான் தொடர்ந்து கண்டென்ட் கொடுத்தால் நான் என்ன செய்வது?
ஆஜானின் ஃபர்னிச்சர்
நொறுக்கப்பட்ட விவகாரத்தில் அவர் கொடுத்துள்ள விளக்கமும் என் எதிர்வினையும் கீழே.
அண்மையில் ஒரு உரையாடலில் வெண்முரசு பற்றி பேசும்போது அதில்
முற்றிலும் தமிழிலேயே மொழியைக் கையாண்டிருந்தேன் என்றும், தத்துவம் மற்றும் பிற
துறைகளில் கலைச்சொற்கள் தேவை ஆகும்போது தமிழின் பழைய கலைச்சொற்களையே
பயன்படுத்தினேன் என்றும், அவை கிடைக்காதபோது புதிய தமிழ்ச் சொற்களை உருவாக்கி
பயன்படுத்தினேன் என்றும் கூறினேன். பழைய கலைச்சொற்களை பயன்படுத்தியதற்கு உதாரணமாக
‘ஊழ்கம்’ என்ற சொல்லையும் புதிய கலைச்சொல்லை நான் உருவாக்கியதற்கு ‘அறைக்கலன்’
என்ற சொல்லையும் சொன்னேன். அது ஒரு நினைவுப்பிழையாக இருக்கலாம்.
நீங்கள் அதைச் சொன்ன
தோரணை, உடல் மொழி எல்லாமே அது ஒரு நினைவுப்பிழை அல்ல, நான் சொல்வதே கட்டளை, என்
கட்டளையே சாசனம் என்ற திமிரின் வெளிப்பாடோடுதான் அமைந்திருந்தது.
இருபத்தி ஆறாயிரம் பக்கங்களில் பல ஆயிரம் சொற்களை புதிதாக
பயன்படுத்தியிருக்கிறேன். அவற்றில் சில நூறு சொற்களேனும் இன்று ஒவ்வொருவரும்
புழங்குவதாக உள்ளன.
அய்யா ஆஜானே அப்படி
நீர் உருவாக்கி இன்று மக்கள் பயன்படுத்தும் புதிய தமிழ் வார்த்தைகளில் ஒரு நூறு
வார்த்தைகளாவது சொல்லுங்களேன் பார்ப்போம். தெருவோர மாரியம்மனை இன்று அனைவரும்
பரபிரம்ம ரூபிணி என்ற் சொல்கிறார்கள். அதுவே தமிழில் அதிகம் புழங்கும் வார்த்தை
என்று தடம் பேட்டியில் சொன்னீர்களே, அது போலத்தான் இதுவும்தானா?
அறைக்கலன் என்ற
சொல்லும் முன்னரே ஆட்சித்தமிழ் அகராதியில் இருப்பதை நான் பார்த்ததில்லை. இந்த
அகராதிகள் எவையும் புழக்கத்தில் இல்லை என்பதையும் இச்சொற்களையே நான் சொன்னபிறகு
இவர்கள் அகழ்ந்து தேடி எடுத்து தான் சொல்லவேண்டியிருக்கிறது என்பதையும் எவரும்
பார்க்க முடியும்.
“ஆபரேஷனை
கையிலெடுத்த 48 மணி நேரத்துல முடிச்சிருக்கோம்” என்று சுந்தர பாண்டியனில் சூரி
சொல்வார். உங்க பேட்டி வெளி வந்த அஞ்சு நிமிஷத்தில உங்க அறை கலனை அடிச்சு
நொறுக்கிட்டாங்க. அது அகழ்வராய்ச்சியா? உங்களுக்கு தெரியலைன்னா வேறு யாருக்குமே
தெரியாதா என்ன?
நன்று, அகராதியில்
அச்சொற்கள் இருந்தால் அச்சொல்லை நான் உருவாக்கவில்லை என்று ஒத்துக்கொள்கிறேன்.
ஓ! இதற்குப் பிறகு
கூட நாந்தான் உருவாக்கினேன்னு சொல்வீங்களா?
அதனால் வெண்முரசு
தூய தமிழில் எழுதப்பட்ட ஒரு படைப்பு என்பதோ வெண்முரசில் பல ஆயிரம்
புதியதமிழ்ச்சொற்கள் உள்ளன என்பதோ அவற்றில் பல நூறு தமிழ்ச் சொற்கள் இன்று புழக்கத்தில்
உள்ளன என்பதோ
தூய தமிழில்
எழுதப்பட்ட படைப்பு என்ற இந்த அறைகலனை கவிஞர் மகுடேஸ்வரன் தகர்த்து விட்டார்.
இதற்கு எவ்வளவு பக்கத்தில் பதில் சொல்லப் போறீங்க?
சென்ற நூறாண்டுகளில்
எந்த தமிழ் எழுத்தாளனும் தமிழ் மொழிக்கு ஆற்றிய பங்களிப்பை விட வெண்முரசின் பங்களிப்பு
அதிகம் என்பதோ இல்லாமல் ஆகிவிடுவதில்லை.
மறுபடியும் சப்பாணி
உதாரணத்தைத்தான் சொல்ல வேண்டியுள்ளது. “கோபாலகிருஷ்ணன்னு கூப்பிடுங்கடான்னு
நாந்தான் சொல்றேன். ஒரு பய மதிக்க மாட்டேங்கறான்” என்று சப்பாணி புலம்புவது போல
வெண்முரசு பற்றி நீங்கதான் மெச்சுக்கிறீங்க. வேறு யாரும் சீண்டுவதே இல்லை.
அச்சொல்லை
பிடித்துக்கொண்டு குதிப்பவர்கள் தங்களை அறியாமலேயே வெண்முரசின் தனித்தமிழ்
மொழிநடையையும் அதிலிருக்கும் பிரம்மாண்டமான சொல்லாக்கத்தையும் பொது வாசகர்களின்
கவனத்துக்கு கொண்டு வருகிறார்கள். அது மகிழ்ச்சிக்குரியதே நன்றி.
இந்த நெனப்புதான்
பொழப்பை கெடுக்குமாம். ஜெயமோகன் ஒரு டுபாக்கூர், பொய்யன், திமிரு பிடிச்சவன்
என்பதுதான் இன்னொரு முறை நிரூபணமாகி உள்ளது. நீயெல்லாம் ஒரு எழுத்தாளன்னு நம்பின
சில அப்பாவிங்க கூட உன் பக்கம் தலை வச்சு படுக்க மாட்டாங்க என்பதுதான் யதார்த்தம்.
ஐயா, புளிச்ச மாவு
ஆஜானே, “வார்டன்னா அடிப்போம்” என்றெல்லாம் யாரும் உம்மை வேண்டுமென்றே
அடிப்பதில்லை. உம் பிற்போக்குத்தனம், அளவற்ற ஆணவம், எண்ண முடியா பொய்கள், ஜாதி, மத
வெறி ஆகிய உம் மோசமான குணங்களுக்காகத்தான். மோசமான மனிதனாக இருந்த போதும்
யோக்கியன் போல, உத்தமன் போல போடும் வேடங்களுக்காகத்தான். நீ ஒழுங்கா இருந்தா சேதம்
கம்மி. திமிரோட எழுதினா அடி வாங்குவதை தவிர்க்கவே முடியாது.
உன் போக்கு இப்படியே
தொடர்ந்தால் உம்மை தாக்குவதுதான் அறம்.