நேற்று ஒரு தோழர் அனுப்பிய காணொளி.
ஆன்லைன் வகுப்புக்களில் ஆசிரியர்கள் படும் அவதிகளைப் பற்றி ஒரு குழந்தையை வைத்தே காணொளி எடுத்திருந்தது சுவாரஸ்யமானது.
நகைச்சுவைக்கான காணொளி என்றாலும் எல்லாம் உண்மைதான்.
வசதி உள்ளவர்களால் ஆன்லைன் வகுப்புக்களில் கலந்து கொள்ள முடிகிறது. வசதி இல்லாத ஏழை, எளிய குடும்பங்களின் குழந்தைகள் என்ன செய்வார்கள் என்ற கேள்வியும் இணைந்தே எழுந்தது.
அரசுப்பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புக்கள் என்று செங்கோட்டையன் சொன்னதாக படித்தேன். ஏழைக்குழந்தைகளுக்கு என்ன ஏற்பாடு செய்யப் போகிறது தமிழக அரசு?
No comments:
Post a Comment