கருத்துச் சுதந்திரத்திற்காக உயிரையே கொடுக்கிற மகான் ஆஜான், “முகநூலில்
உயிர்மை இணைய தள முடக்கம்” பற்றி ஏதாவது
எதிர்ப்பை பதிவு செய்துள்ளாரா என்று தெரிந்து கொள்ள அவர் பக்கம் போனேன்.
“என் மீதான கண்டன அறிக்கையில் கையெழுத்திட்டவர்களின்
கருத்துரிமை பாதிக்கப்பட்டாலும் நான் குரல் கொடுப்பேன்” என்று பேசிய வீர வஜனத்தை
பின்பற்றுகிறாரா என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன்.
ஆனால் அவர் வழக்கம் போல செல்பி கேள்வி பதிலில்
இது
எல்லா தரப்பிலும் நடக்கிறது. இஸ்லாமிய, கிறிஸ்தவ தரப்புகளில் எந்த வாசிப்பும் இல்லாமல்
செவிவழிச்செய்தியாலேயே ஒரு காழ்ப்பை உருவாக்கிக்கொண்டு அதைக் கொட்டுகிறார்கள். திமுகவினர்,
கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல அதே அளவுக்கு இந்துத்துவர்களும், பிராமணர்களும் காழ்ப்பையும்
திரிப்பையும் கொட்டுவதைக் காணலாம். அத்தனை பேருக்கும் ஒரே பதில், எல்லாமே இணையத்தில்
கைதொடும் இடத்தில் உள்ளது, படித்துப் பாருங்கள் என்பதுதான்
ஆனால்
மிகப்பெரும்பாலானவர்கள் படிக்கமாட்டார்கள். தங்கள் காழ்ப்புகளை தக்கவைத்துக்கொள்ளவே
முயல்வார்கள். ஏனென்றால் இங்கே பெரும்பாலானவர்களின் அரசியல்-அறிவுத்தள நம்பிக்கைகள்
அவர்களின் சாதி,மதம் சார்ந்தவை. அனேகமாக பத்துவயதுக்குள் அவை முடிவாகிவிடுகின்றன. அதன்பின்
அதில் எந்த வளர்ச்சியும் இருப்பதில்லை – காழ்ப்புகள் மட்டும் திரட்டிக்கொள்ளப்படும்.
நான்
பேசிக்கொண்டிருப்பது இவர்களிடம் அல்ல, தன் ரசனை அறிவுத்தரப்பு ஆகியவற்றை சொந்த தேடலால்
உருவாக்கிக்கொள்ளும் மிகச்சிறுபான்மையினரான சிலரிடம். அவர்களின் நிலைபாடுகள் அவர்களின்
பிறப்பால் தீர்மானிக்கப்பட்டவை அல்ல.
என்று அனைவரையும் வசை பாடுவதில்தான் மும்முரமாக இருக்கிறார்.
போதாக்குறைக்கு உயிர்மை வேறு அவருடைய பரம வைரி முனுஷ்ய புத்திரனுடையது.
அந்த மகிழ்ச்சியை இருபது பக்க கட்டுரையாக எழுதாமல் இருந்ததற்கே
நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.
பிகு : ஆஜானுக்கு மறுபடியும் இன்னொரு டம்ப்ளர் பாயசம் கொடுக்கனும் போல இருக்கே! மூன்றே பத்திதான். அதில்
முப்பது கிலோ விஷம்
No comments:
Post a Comment