Wednesday, July 1, 2020

“ உயிர்மை” மேல் என்ன கோபம்?


 முக நூலுக்கு  “ உயிர்மை” மேல் என்ன கோபம்?

உயிர்மை பத்திரிக்கையின் இணைய தளத்தில் வெளியான பதிவுகள், கட்டுரைகள் ஆகியவற்றை இணைத்தால் அதனை முக நூல் நீக்கி விடுகிறது என்று பலரும் எழுதியிருந்தார்கள்.

அது உண்மைதானா என்று தெரிந்து கொள்ள நேற்று உயிர்மை இணைய தள முகவரியை முகநூலில் பதிவு செய்தேன். இரு முறை முயற்சித்தும் அந்த இணைய தள முகவரி முடக்கப்பட்டுள்ளது என்று சொல்லி மறுத்து விட்டது.

கீழே ஸ்க்ரீன் ஷாட் வைத்துள்ளேன்.



ஏன் இந்த கோபம் முக நூலுக்கு?

நரேந்திர மோடி பற்றிய ஒரு கட்டுரைக்காக ஒட்டு மொத்தமாக உயிர்மை தளத்தையே இருட்டடிப்பு செய்துள்ளது முக நூல். சங்கிகள் உயிர்மை மீது புகார்களை அள்ளி வீசியதால் வந்த விளைவு என்றும் தெரிகிறது. இந்து முஸ்லீம் ஒற்றுமையை ஊக்குவிக்கிற வகையில் தோழர் ஏ.ஏ.கரீம் எழுதிய அற்புதமான சிறுகதை ஒன்றும் முடக்கப்பட்டது என்பது ஒரு கொடுமை. 

பல்வேறு ஆபாசப் படங்களின் இணைய தளங்களை அனுமதிக்கிற முகநூல் ஆட்சியாளர்கள் மீதான விமர்சனத்திற்காக ஒட்டு மொத்த இணைய தளத்தையே தடை செய்வதில் என்ன நியாயம் இருக்கிறது?

அந்த கட்டுரையை வலைப்பக்கத்தில் பகிர்ந்து கொண்டு முகநூல் பக்கத்தில் இணைத்தால் என்ன செய்வார்கள் என்று நாளை சோதிக்க வேண்டும்.

No comments:

Post a Comment