தோழர்
பிணராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்ற பெருங்கூச்சலை பாஜகவும் காங்கிரஸ் கட்சியும்
எழுப்பிக் கொண்டிருக்கிறது.
பாஜக
வின் ஸ்லீப்பர் செல்களாக கேரள காங்கிரஸ் செயல்பட்டு அக்கட்சியை அழிவுப் பாதைக்கு அழைத்துச்
செல்கின்றனர். நல்லதுதான். சீக்க்கிரமே நடக்கட்டும். கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளால்
கேரள மாநில இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு கிடைத்து வரும் நற்பெயர், காங்கிரஸ்காரர்களை
பிராந்தன்களாக்கி விட்டது போல.
காங்கிரஸ்
செய்வது அரசியல். பாஜக செய்வது அரசியல் மட்டுமல்ல, குற்றவாளிகள் தங்கள் கட்சிக்காரர்கள்
என்பதை மறைப்பதற்கான கேவலமான திசை திருப்பும் உத்தி.
10.07.2020
அன்றைய தீக்கதிர் நாளிதழ் தங்கக் கடத்தலில் தொடர்புடையவர்களின் பின்புலத்தை வெளிச்சம்
போட்டு காட்டுகிறது. ஸ்வப்னா சுரேஷ் என்ற குற்றவாளிக்கு அறிமுகமானவர் என்று சொல்லப்பட்ட
சிவராமன் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அவர் வகித்த முதல்வரின் செயலாளர் என்ற பதவியிலிருந்து
அகற்றப்பட்டுள்ளார்.
சரித்திடமிருந்து தங்கம் வருவது சந்தீப் நாயரிடம்... பாஜக தலைவர்களிடம் நெருங்கிய தொடர்பு அம்பலம்...
திருவனந்தபுரம்:
தங்க
கடத்தல்
வழக்கின்
முக்கிய
புள்ளியாக
சுங்கத்துறையினர் கண்டறிந்துள்ள
சந்தீப்
நாயர்ஆடம்பர
வாழ்க்கைக்கு
மாறியது
குறுகிய
காலத்தில்.
திருவனந்தபுரம் சாலை
பகுதியில்வசிக்கும் பாஜக
தலைவரின்
ஓட்டுநராக
இருந்தசந்தீப்
பின்னர்
சொந்த
தொழில்
நடத்தும்
அளவுக்கு
வளர்ந்தார்.
அவ்வப்போது
வெளிநாடு
களுக்கு
பயணமும்,
நட்சத்திர
விடுதி
வாசமும்வாழ்க்கையின் பகுதியாக
மாறியது.
பாஜக
தலைவர்களுடன்
நெருங்கிய
தொடர்பில்
உள்ள
இவர்கள்
3 முறை
கடத்திய
தங்கத்தின்
மதிப்பு
ரூ.60
கோடி
மதிப்புடவை
என
தெரியவந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சொந்தமாக கார்பன்டாக்டர் ஒர்க் ஷாப் என்கிற நிறுவனத்தை தொடங்கினார். சந்தீபுக்கு திரைப்பட உலகின் முக்கிய பிரமுகர்களிடமும் தொடர்புள்ளது. கார்களின் மீது மோகம் கொண்ட இவரிடம் மகாராஷ்டிரா, தமிழ்நாடு பதிவு எண்கள் கொண்ட இரண்டு கார்கள் உள்ளன. யுஏஇ தூதரகத்திற்கு சென்றபோது இவருடன் சொப்னாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து அரசுமுறை யிலான பாதுகாப்புடன் தங்கம் கடத்த களம் அமைத்தனர். சரித்திற்கு தூதரகத்துடன் உள்ள உறவை சாமர்த்தியமாக பயன்படுத்தி விமான நிலையத்திலிருந்து கடத்தல் சரக்குப் பெட்டிகளை பெற்றுவந்துள்ளார்.
அரசு முறையிலான பாதுகாப்புடன் மூன்று முறை கடத்தியது ரூ.60 கோடி மதிப்பிலான தங்கம். கடத்தலின் முக்கிய சூத்ரதாரிகள் சொப்னாவும் சந்தீபும் என சுங்கத்துறையிடம் சரித் வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த ஆண்டு 12 முறை இதுபோன்று தங்கம் கடத்தியதாகவும் சரித் தெரிவித்துள்ளார். தங்கம் கொடுவள்ளியில் கொடுத்து பணம் பெற்றுக் கொண்டு அதை அடுத்த கடத்தலுக்கு பயன்படுத்துவது வழக்கம். விமான நிலையத்திலிருந்து பெற்றுக்கொள்ளும் பெட்டி மணக்காடு யுஏஇ தூதரகம்ஏற்கனவே நிச்சயித்த மையத்தில் தானே ஒப்படைப்பதாகவும், ஒப்படைக்க வேண்டிய இடத்தை சொப்னா தெரிவிப்பார் என்றும் அந்த மையத்தில் வைத்து சந்தீப் நாயரிடம் தங்கம் ஒப்படைக்கப்படும் என விசாரணையில் சரித் தெரிவித்துள்ளார். பிடிபட்ட கள்ளக்கடத்தல் தங்கத்தை விடுவிக்க பாஜகவின் தொழிற்சங்க பிரிவான பிஎம்எஸ் தலைவர் ஹரிராஜ் சுங்கத்துறையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜக தலைதப்பவே முதல்வர் அலுவலகத் தொடர்பு உள்ளதாக பொய் பிரச்சாரத்தை கேரள பாஜக தலைவர் கே.சுதாகரன் தொடங்கியதாக கருதப்படுகிறது.
சிபிஎம் ஊழியரை தாக்கியவர் சந்தீப்
தங்க கடத்தல் வழக்கில் சம்மந்தப்பட்டு சுங்கத்துறையால் தேடப்படும் சந்தீப் நாயர் நெடுமங்காடு பகுதியில் சிபிஎம், டிஒய்எப்ஐ ஊழியர்களுக்கு எதிராக நடந்த தாக்குதலில் குற்றவாளியாவார். கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது நெடுமங்காடு மூக்கோலியில் டிஒய்எப்ஐ ஊழியரை தாக்கியது சந்தீப் நாயர் உள்ளிட்ட கும்பலாகும். பாஜக மாநில பொதுச் செயலாளரான கே.ஏ.பாகுலேயனின் வலதுகரமாக நெடுமங்காடு பகுதி மக்களால் அறியப்பட்டவர் சந்தீப் நாயர். ஆனால் இவரை சிபிஎம் உறுப்பினராக சித்தரித்து ஏசியாநெட் தொலைக்காட்சி பொய் பிரச்சாரம் மேற்கொண்டது. சந்தீப்பின் தாயார் உஷா தன்னை சிபிஎம் ஆதரவாளர் என தெரிவித்ததை ஒலிமறைவு செய்து ஏசியாநெட் பரபரப்பு ஏற்படுத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து அந்த ஒலிபரப்பு நிறுத்தப்பட்டது. சந்தீப் நாயர் பாஜகவின் உயர்மட்ட தலைவர்களுடன் நெருங்கிய தொர்பில் உள்ளவர். பாஜக திருவனந்தபுரம் மண்டல தலைவரும் மாநகராட்சி கவுன்சிலருமான எஸ்.கே.பி.ரமேஷிடம் வேலை செய்தவர் சந்தீப். ‘ஆல்வேய்ஸ் பிஜேபி’ என்கிற வாசகத்துடன் கும்மனம் ராஜசேகருடன் உள்ள படத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சந்தீப். கேரள அரசுக்கு எந்த தொடர்பும் இல்லாததங்க கடத்தல் வழக்கில் முதல்வர் அலுவலகத்துக்கு எதிராக திசைதிருப்பும் நோக்கத்துடன் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜகவுக்கும் அதற்கு துணைபோகும் காங்கிரசுக்கும் பெரும்பின்னடவை சந்தீபின் தொடர்புகள் ஏற்படுத்தியுள்ளன.
தொடரும் தங்க கடத்தலும் பாஜகவும்
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஒரு ஆண்டுக்கு முன்பு 25 கிலோ தங்கத்தை டிஆர்ஐ அதிகாரிகள் பிடித்தபோது அதை விடுவித்தது பாஜக தலைவர்கள். 2019 மே 13 இல் தங்கம் கடத்திய வழக்கில் சுங்கத்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் அந்த வழக்கில் முன்னேற்றம்இல்லை. பின்னர் சிபிஐ விசாரணைக்கு சென்றாலும் வேறு எவரையும் வழக்கில் உட்படுத்தாமல் அதே நிலையில் உள்ளது இந்த வழக்கு. அதன் பிறகு 10 கிலோ தங்கம் பிடிபட்டது. இந்த வழக்கிலும் கடத்திய இருவர் கைதுசெய்யப்பட்டதோடு விசாரணை முடங்கியது. தங்க கடத்தலில் சுங்கத்துறை அதிகாரிகளின் பங்கு குறித்து அப்போது மத்திய அரசுக்குவருவாய் நுண்ணறிவு இயக்குநரகம் அறிக்கை சமர்ப்பித்தது. 2019 செப்டம்பரில் அனுப்பிய கடிதத்தில் வெளியுறவு அமைச்சகத்தின் சில உயர்நிலையில் உள்ளவர்களின் தலையீடு குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. ஆனால் அதுவும் வெறும் காகிதமாகிப்போனது.
விசாரணைக்கு
முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்று கேரள முதல்வர் அறிவித்துள்ளார். அவர் பிரதமருக்கும்
நிர்மலா அம்மையாருக்கும் எழுதிய கடிதத்தையும்
பகிர்ந்து கொண்டுள்ளேன்.
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை யினரிடம் பிடிபட்ட தங்க கடத்தல் வழக்கில் முறையான விசாரணை நடத்த பிரதமர் அவசரமாக தலையிட வேண்டும் என அவருக்கு கேரள முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடிதத்தில் முதல்வர் கூறியிருப்பதாவது: அரசுமுறையிலான பெட்டகத்தில் மறைத்து பெரிய அளவில் தங்கம் கள்ளக்கடத்தலுக்கு முயன்றது மிகவும் தீவிரமானது. இதுகுறித்து சுங்கத்துறையின் புலனாய்வு நடப்பதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கிறது. பல்வேறு பரிமாணங்களிலான விசாரணை இந்த வழக்கில் தேவை.
சம்மந்தப்பட்ட அனைத்து மத்திய விசாரணை முகமைகளும் ஒருங்கிணைந்து அவசரமாக விசாரிக்க வேண்டும். கள்ளக்கடத்தலின் பிறப்பிடம் முதல், கொண்டு செல்லப்படும் இடம் வரை எதுவென வெளிப்படுத்துவதும் அனைத்து விசயங்களும் விசாரணையில் பரிசீலனை செய்யப்பட வேண்டும். மீண்டும் இப்படி ஒரு நிகழ்வு நடக்காத வகையில் இந்த குற்றம் குறித்த அனைத்து தொடர்புகளையும் வெளிக்கொணர வேண்டும்.
விசாரணை முகமைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் ஆதரவும் மாநில அரசு அளிக்கும் என முதல்வர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு அனுப்பிய கடிதத்திலும் இதை முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார்.
பாஜகவின்
தொடர்பை மறைக்க என்.ஐ.ஏ என்ன செய்யப் போகிறது என்று அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.
பல
முதலாளித்துவ ஊடகங்களின் செய்திகளைப் படித்துப் பார்த்தேன். சந்தீப் நாயர் என்ற பெயரை
இருட்டடிப்பு செய்தே எழுதியுள்ளார்கள். பாஜக போட்ட எலும்புத்துண்டுகளுக்கு விசுவாசமாக
வாலை ஆட்டுகிறார்கள் போல.
சங்கிகளின் பொய்ப்பிரச்சாரம் எவ்வளவு காமெடியானதும் கூட என்பதை கீழே உள்ள சம்பவம் உணர்த்தும்.
மலையாளத் தொலைக்காட்சி ஒன்றில் விவாதம்...
பாஜக பிரதிநிதி சுரேஷ்:
தங்கக் கடத்தல் குற்றவாளிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் பின்னணி உள்ளது...DYFI மாநிலப் பொருளாளரின் சித்தியின் மகளின் கணவர் தான் குற்றவாளி சந்தீப் நாயர்...
CPIM பிரதிநிதி தோழர். எஸ்.கே. சஜீஷ்:
சுரேஷ் நீங்கள் குறிப்பிட்ட DYFI மாநிலப் பொருளாளர் பொறுப்பில் உள்ளது யார் என்று தெரியுமா?
அது இங்கே உங்களுடன் விவாதம் செய்து கொண்டிருக்கும் நானே தான்... எனக்கு அப்படி ஒரு சித்தியோ, சித்திக்கு மகளோ இல்லையே... அப்படியெனில் சித்தி மகளின் கணவர் தான் குற்றவாளி சந்தீப் நாயர் என்று எப்படி கூறுகிறீர்கள்...?எதற்காக இது போன்ற பச்சைப் பொய்யை கூசாமல் வந்து கூறுகிறீர்கள்...?
இந்த பதிலைக் கேட்ட சங்கி பல்ப் வாங்குன அழகே அழகு... ஹா... ஹா... காணக் கண் ஆயிரம் வேண்டும்...
சங்கிகள் ஒரு அராஜகப் போராட்டத்தின் போது மக்களின் எதிர்ப்பை சந்திக்க முடியாமல் ஓட்டமெடுக்கிற காட்சிதான் மேலே உள்ள படம். இந்தப் பிரச்சினையிலும் அப்படித்தான் கேரள சங்கிகள் முகம் காட்டாமல் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment