Saturday, July 18, 2020

நான் கையெழுத்திட்டேன். நீங்களும் . . .



கொரோனா காலத்திலும் தொடர்கின்ற தீண்டாமைக் குற்றங்களை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ மாநிலக் குழு நேற்று இணைய வழி கையெழுத்து இயக்கத்தை துவக்கி உள்ளது. 

அது தொடர்பாக மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை கீழே உள்ளது. 





*இந்திய கம்யூனிஸ்ட் கட்சி( மார்க்சிஸ்ட்)*
*தமிழ்நாடு மாநிலக்குழு*

*அன்பான தோழர்களுக்கு வணக்கம்!*

*கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் தலித்துகள் மீது*
*நிகழ்த்தப்பட்ட 81 வன்கொடுமைகளில்* 
*22 தலித்துக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன.*
*5 தலித் பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்படுள்ளார்கள்,*
*134 தலித்துகளுக்கு கொடுங்காயங்கள் ஏற்பட்டுள்ளன. 8 தலித் குடியிருப்புகள் தாக்கப்பட்டுள்ளன,*
*3 தலித் ஊராட்சித் தலைவர்கள் அவமதிக்கப்பட்டுள்ளார்கள்*

*மட்டுமல்லாமல்*
*மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்தது முதல் கொத்தடிமையாக தலித்துகளை வைத்திருந்தது வரை*
*எண்ணற்ற வன்கொடுமைகள் நடந்திருப்பதை*
*தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின்*
*கள ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.*

*இப்பிரச்சினையில் தமிழக முதல்வர் தலையிட வேண்டும் என 21.06.2020 அன்று நமது கட்சியின் சார்பில் விரிவான மகஜர் அனுப்பினோம். இது தொடர்பான முழுமையான விபரங்களை 22.06.2020 தீக்கதிரில் வெளியிட்டோம்.*இதர பத்திரிக்கைகளிலும் செய்திகள் வெளிவந்தன.*

*தற்பொழுது, தமிழக அரசுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் விதமாக இணையவழியில் விண்ணப்பங்கள் அனுப்பும் இயக்கத்தை நமது கட்சின் சார்பில் முன்னெடுப்பது என தீர்மானித்துள்ளோம்*.

*17.07.2020 முதல் சில தினங்கள் நாம் இந்த மகஜரை அனுப்பலாம்.*

*http://chng.it/DknnpfTv2K*

*இணையவழியில் மகஜர் அனுப்புவதற்கு செய்ய வேண்டியவை.*

*ஆண்டிராய்டு போன் வைத்திருக்கும் அனைவரும் இதனை எளிதாக அனுப்ப முடியும்.*

*1.இதனோடு கொடுக்கப்பட்டிருக்கும் இணைய இணைப்பை* 
*(Link)தொட்டவுடன்,*
*இணையவழி விண்ணப்பம் உங்களுக்கு தெரியவரும்.*

*2.விண்ணப்பித்தில் கையெடுத்து இடுக (sign the petition)  என தெரியும் இடத்தை தொட்டவுடன்,*

 *உங்கள் பெயர் மற்றும் சிலவரிகள் நீங்கள் எழுதுவற்கும் ஒரு கட்டம் (Box) கொடுக்கப்பட்டிருக்கும். அதனை பயன்படுத்த விரும்புகிறவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.*

*மீண்டும் sign the petition என்பதைத் தொட்டவுடன்*

*அது கையெழுத்தாகி முதல்வர்*
*அலுவலகம் சென்றுவிடும்.*

*மேற்கண்ட செய்தியை விரிவாக நமது தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் தெரிவித்து ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் செல்வதை உறுதி செய்திட வேண்டும்*

*தோழமையுடன்*
*கே.பாலகிருஷ்ணன்*
**மாநில செயலாளர்.*

கோரிக்கைகளை சுலபமாக புரிந்து கொள்ள வசதியாக வெளியிடப் பட்டுள்ள படங்களை கீழே அளித்துள்ளேன்.











இப்படிப்பட்ட இயக்கத்திற்கான அவசியம் ஏன் உருவானது என்பதை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கள ஆய்வு அறிக்கை உணர்த்தும்.

கள ஆய்வு அறிக்கையை சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி திரு ஹரி பரந்தாமன் வெளிட்டு விவரங்களை பகிர்ந்து கொள்கிற காணொளியையும் அவசியம் பாருங்கள்


இக்கையெழுத்தியக்கம் நாளையோடு நிறைவு பெறுகிறது.

நான் கையெழுத்திட்டு விட்டேன்.

நீங்களும் உடனடியாக கையெழுத்திடுங்கள். 

அநீதிக்கு எதிரான முழக்கத்தில் உங்கள் குரலும் இணையட்டும். 

கையெழுத்திடுவதற்கான இணைப்பு கீழே

http://chng.it/DknnpfTv2K

No comments:

Post a Comment