Monday, July 27, 2020

ஜெமோ காந்தியாம் !!!!


ஜெமோவின் லேட்டஸ்ட் கேள்வி பதிலில் அவர் தன்னை மகாத்மா காந்தியாக சித்தரித்துக் கொள்ளும் அளவிற்கு பித்து தலைக்கேறி உள்ளது. 

உங்களின் பொறுமையை சோதிக்கக் கூடாது என்பதற்காக கேள்வியை முழுமையாகவும் பதிலில் முக்கியமான அம்சத்தை மட்டும் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

வலது சாரிகளும் பாஜக காரர்களும் தன்னை எதிர்ப்பதாக ஒரு பில்ட் அப் தருகிறாரே, அங்கேதான் ஜெயமோகனின் டுபாக்கூர்தனம் பல்லிளிக்கிறது. இதிலே அதிமுக காரர்களை வேறு இழுக்கிறார். அவர்களோ தாங்கள் உண்டு, தாங்கள் வாங்கும் கமிஷன் உண்டு என்று மும்முரமாய் இருப்பவர்கள். அவர்களுக்கும் இலக்கியத்திற்கும் எந்தக் காலத்தில் தொடர்பு இருந்திருக்கிறது? 



அன்பு ஜெ அவர்களுக்கு,
வணக்கம்.
தங்களை தொடர்ந்து படிப்பவர்களுக்கும், பழகியவர்களுக்கும் நீங்கள் எந்த அளவிற்கு தலித் மக்களின் உரிமைகளுக்காக போராடுபவர், குரல் கொடுப்பவர் என நன்றாகத் தெரியும். தலித் உரிமைப் போராளிகளே தயங்கி நிற்கும் பல பிரச்சனைகளை துணிவுடன் எடுத்து கையாள்பவர் நீங்கள்.
ஆனால், எனக்குள்ள அய்யமும், துணுக்குறலும் எங்கே ஏற்பட்டதென்றால்,அதுபோன்ற தலித் போராளிகளும், தலித் படிப்பாளிகளும்  எடுத்த எடுப்பிலேயே உங்களை இடக்கையால் புறந்தள்ளி விடுகிறார்கள் என்பதில்தான்.
நான்  பழகும் தலித் சமுதாய – படித்த நண்பர்களிடமே, குறிப்பிட்ட நடப்பில் அவர்களுக்காக நீங்கள் முனைந்து எழுதியதைச் சொல்வேன். அதை ஒவ்வாமையுடன் கடந்து விடுவார்கள்.குறைந்தபட்ச தர்க்கம் கூட இருக்காது. தனக்காக வலிந்து பேசிய ஒருவரைப்பற்றியதான நன்மதிப்பும் இருக்காது. எனில்  யாருக்காக எழுதுகிறீர்கள்? பேசுகிறீர்கள்?
நீங்கள் யாருக்கெல்லாம் எதிரி?வலது சாரிகள், இடது சாரிகள், மத அடிப்படைவாதிகள், முற்போக்குகள் – பிற்போக்குகள், பகுத்து அறிவாளர்கள் – பகுத்து அறிவிலாதவர்கள், திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் மற்றும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள்… இத்தனை பேருக்கும் எதிரியாய் இருந்துவிட்டு எந்த தரப்பிற்கு உங்களை நிறுவப்போகிறீர்கள்? அல்லது காந்தியைப்போல் சகல தரப்பினராலும் கைவிடப்பட போகிறீர்களா?
அன்புடன்,
எம்.எஸ்.ராஜேந்திரன்
திருவண்ணாமலை

அன்புள்ள ராஜேந்திரன்
காந்தியைப்போல என்பதே எவ்வளவுபெரிய மதிப்பு, அதை அடைவதென்றால் பேறு அல்லவா?

No comments:

Post a Comment