Tuesday, July 28, 2020

குண்டாஸ் ஆக்ட் என்றால் ????

எழுத்தாளரும் வழக்கறிஞருமான தோழர் இரா.முருகவேள் அவர்களின் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன்.


குண்டாஸ் ஆக்ட், குண்டாஸ் ஆக்ட் என்கிறார்களே அதன் முழுப்பெயர் இதுதான்.

THE TAMIL NADU PREVENTION OF DANGEROUS ACTIVITIES
OF BOOTLEGGERS, CYBER LAW OFFENDERS[6], DRUG
OFFENDERS, FOREST-OFFENDERS,[2] GOONDAS, IMMORAL
TRAFFIC OFFENDERS, SAND OFFENDERS[4], SEXUALOFFENDERS,[7] SLUM-GRABBERS AND VIDEO PIRATES[3] ACT,
1982
TAMIL NADU ACT NO.14 OF 1982

கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்கள், சைபர் லா குற்றவாளிகள், விடியோ பைரைசி செய்பவர்கள், வனம் தொடர்பான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், மணல் திருடர்கள், போதை மருந்து கடத்துபவர்கள், குடிசைப் பகுதிகளைக் கைப்பற்றுபவர்கள், பாலியல் தொழிலில் ஈடுபடுத்துபவர்கள், இவர்களோடு குணடர்கள் . . . .


இப்போது இருக்கும் பிரச்சினைக்கும் இதற்கும் எங்காவது ஒட்டுகிறதா பாருங்கள்?

குண்டர்கள் என்று பொதுவாகச் சொன்னால் யார்? அரசு யாரைச் சொல்கிறதோ அவர்கள்தான். பொது அமைதியைப் பாதிக்கும் வேலையில் ஈடுபடுபவர் எல்லாம் குண்டாதான். டெஃஃபனிசன் படி.

வழக்கமாக ஒருவரை கைது செய்தால் 24 மணி நேரத்துக்குள் நீதிமன்றத்தில் கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும். குற்றத்தைப் பொறுத்து 30, 60,90 நாட்களில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்யாமல் ஒருவரை சிறையில் வைக்க அரசு விரும்பினால் இந்த சட்டத்தில் கைது செய்து மூன்று மாதம் ஜாமீன், விசாரணை, குற்றப்பத்திரிக்கை இல்லாமல் அடைத்து வைக்கலாம். பின்பு அவர் சிறைப்பட்டிருக்கும் காலத்தை மேலும் அதிகரிக்கலாம். இதுதான் குண்டாஸ் ஏக்ட். இதைவிட கடுமையான வேறு சட்டங்களும் உண்டு.

ஒரு மத நம்பிகையை கேள்வி கேட்க உரிமை உள்ளதா? இந்த விஷ்யத்தில் நமது மரபு என்ன என்பதை வேறு தளத்தில் விவாதிக்க வேண்டும். நாத்திகர்களை குண்டர்கள் என்பதும் சட்ட விரோத செயல் செய்தவர்கள் என்பதும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது.

விசாரணை, குற்றப் பத்திரிக்கை, பிணை இல்லாமல் சிறைப்படுத்த வகை செய்யும் எல்லா சட்டஙக்ளுமே மனித உரிமைகளுக்கு எதிரானவைதான்.

எல்லா மனிதர்களுக்கு தங்கள் தரப்பை விளக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஒரு தரப்பு சிறையீலும் மறுதரப்பு அனைத்து அதிகாரங்களுடனும் இருக்கும் போது அது எப்படி சமமான விவாதமாக இருக்கும்?

அரசு ஒரு தரப்புடன் சேர்ந்து மாற்றுக் குரல்களை நெறிக்க முயல்கிறது என்ற சந்தேகம் எழூகிறது.

ஆமாம் சாமி படங்களில் நாத்திகர்களைப் பண்ணாத இழிவா? அதற்கெல்லாம் என்ன தீர்வு?

No comments:

Post a Comment