Wednesday, July 29, 2020

CBI நாகேஸ்வரராவ் பிச்சையெடுக்கலாம்




ஆட்சியாளர்களின் மனம் குளிரும் தீர்ப்புக்கள் கொடுத்து பணி ஓய்வுக்குப் பின்பு  ஆளுனராக, நாடாளுமன்ற உறுப்பினராக பதவி பெற்றார்கள் சதாசிவமும் ரஞ்சன் கோகாயும்.

பாஜக மனம் குளிரப் பேசி அமைச்சரானார் முன்னாள் ராணுவத் தளபதி வி.கே.சிங்.

பாஜக உறுப்பினர் போலவே செயல்பட்டு முப்படை தளபதி என்று புதிய பதவியையே உருவாக்க வைத்து ஒட்டிக் கொண்டார் பிபின் ராவத்.

நான் மட்டும் என்ன சொம்பையா? எனக்கும் ஓய்வு பெற்றதற்குப் பிறகு பதவி வேண்டாமா என்று ட்விட்டரில் தேர்ந்த சங்கியாக மத வெறிப் பதிவுகளை போட்டுள்ளான் நாகேஸ்வரராவ் ( சி.பி.ஐ இயக்குனராக இருந்தாலும் மரியாதை கொடுக்கும் அளவிற்கு அவன் பதிவுகள் இல்லை. இவனுக்கு யாராவது முட்டு கொடுத்துக் கொண்டு வந்தாலும் அவர்களும் மரியாதை இழப்பார்கள்)

பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் அவனை சி.பி.ஐ இயக்குனராக அழகு பார்த்தது மோடி அரசு. இருந்த கொஞ்ச காலத்திலும் விசுவாசத்தோடு நடந்து கொண்டான். இப்போது தீயணைப்புத்துறையில் இருக்கும் நாகேஸ்வரராவ் 31.07.2020 அன்று ஓய்வு பெறப் போகிறான்.

25.07.2020 அன்று மத வெறியூட்டு பதிவுகளை ட்விட்டரில் போட்டுள்ளான். இஸ்லாமியர்களையும் கம்யூனிஸ்டுகளையும் இழிவு படுத்தி உள்ளான். இந்தியாவின் தலை சிறந்த கல்வி அமைச்சர்களாக இருந்த திருவாளர்கள் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் (இன்று பாஜகவில் உள்ள ஆசாதின் மகள் நஜ்மா ஹெப்துல்லா இவன் கருத்துக்களை ஏற்கிறாரா என்று விளக்கமளிக்க வேண்டும்), ஹுமாயுன் கபீர், எம்.சி.சாக்ளா (முஸ்லீம் லீக் கட்சியில் இருந்தாலும் பாகிஸ்தான் என்று தனி நாடு கேட்டதற்காக முகமது அலி ஜின்னாவை கண்டித்து அக்கட்சியுடனான, ஜின்னாவுடனான உறவை துண்டித்தவர், ஆகியோருக்கு மதச்சாயம் பூசி இழிவு படுத்தியுள்ளான். மோடி கல்வி அமைச்சராக நியமித்த சர்டிபிகேட் பிராட் ஸ்மிர்தி இராணி போல அல்ல இவர்கள்.

வரலாற்றையும் புராணத்தையும் குழப்பிக் கொண்டு, பொய் மூட்டைகளை அள்ளி விட்டு, பாஜக, ஆர்.எஸ்.எஸ் எழுச்சியை பாராடி போற்றி எழுதி உள்ளான்.

பணி ஓய்வு பெற்ற பிறகு இவன் எதை எழுதினாலும் யாரும் அதை பொருட்படுத்தப் போவதில்லை. பாஜகவில் இணைந்தால் “கழுதை கெட்டால் குட்டிச்சுவர்” என்று போய்க் கொண்டே இருந்திருக்கலாம். ஆனால் பணியில் இருக்கும் போது இவ்வாறு மத வெறியோடு எழுதுவது, தலைவர்களுக்கு மதச்சாயம் பூசி இழிவு படுத்துவது, ஒரு மத அமைப்பை போற்றுவது எல்லாமே சிவில் சர்வீஸஸ் பணி விதிகளுக்கு முரணானது. கடுமையாக தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்.

இவன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிருந்தா காரத் அமித்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஆனால் நடக்குமா என்பது சந்தேகமே.

இப்படி மத வெறியை கிளப்பி அடுத்த பதவி வாங்குவதற்குப் பதிலாக “அய்யா சாமி, பதவி கொடு” என்று நாகேஸ்வரராவ் மோடியிடம் பிச்சை கேட்டிருக்கலாம்.

பிகு: அவனின் ட்விட்டர் பதிவின் ஸ்க்ரீன் ஷாட் வைத்திருக்கிறேன். அந்த நச்சை பரப்ப வேண்டாம் என்றே இணைக்கவில்லை, அவனின் மூஞ்சியையும் கூட . . .

No comments:

Post a Comment