Wednesday, July 15, 2020

சரித்திர நாயகன் 99



அவர்தான் அடையாளம்.
அவர்தான் உதாரணம்.

தேசத்தின் விடுதலைக்காகவும்
உழைக்கும் மக்கள் உரிமைகளுக்காகவும்
தமிழகத்தில் நீண்ட காலம்
சிறைக் கொட்டடியில் 
அடைபட்டவர் அவர்தான்.

மாணவப் பருவத்தில் ஒரு கேள்வி.
படித்து பட்டம் பெற்று 
வழக்கறிஞராகி வசதியாய் வாழ்வதா?
தேசத்தின் விடுதலைக்காக 
போராட்டத் தீயில் புடம் போட்ட தங்கமாவதா?

படிப்பைத் துறந்தார்.
அமெரிக்கன் கல்லூரி மாணவர்,
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு
சிம்ம சொப்பமானவர்.

விவசாயிகளுக்காக, தொழிலாளிகளுக்காக
அர்ப்பணிக்கப்பட்டது அவரது வாழ்க்கை.

சட்டமன்ற உறுப்பினராய் இருந்தவர்தான்.
ஆனாலும் எளிமைக்கான உதாரணம் 
இன்றும் அவர்தான்.

ஆண்டுகள் கடந்து முதுமை ஒட்டிக் கொண்டாலும்
வாய் திறந்தாலும் என்றும் சிங்கத்தின் கர்ஜனைதான்.

வாழும் வரலாறாய்
என்றென்றும் எழுச்சி தருகிறார்.

99 வது பிறந்த நாள் காணும்
மகத்தான தலைவருக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்.




தமிழில் மட்டுமே கேட்ட அவர் சிம்ம கர்ஜனையை ஆங்கிலத்திலும் கேட்டு சிலிர்த்தது 2013 ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தென் மண்டல மாநாட்டை அவர் துவக்கி வைத்து உரையாற்றிய போதுதான். மேலே உள்ளது அந்த படம்தான். 

பிகு: மறக்க இயலா ஒரு உன்னதத் தருணம் புகைப்படமாய்



1 comment:

  1. Me too excited on hearing his English speech in the szief conf at Chennai.Red salute to com.sankaraiah

    ReplyDelete