Monday, July 6, 2020

அந்த போலீஸ் ஃப்ரண்ட் ஆப் ரௌடியாம் . . .



 உத்தர பிரதேசத்தில் ஒரு ரௌடியை கைது செய்யப் போன காவல்துறையினர் எட்டு பேர் அந்த ரௌடிக் கூட்டத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

விகாஸ் துபே என்ற ரௌடியின் எடுபிடியாக இருந்த அக்னிஹோத்ரி என்பவனை நேற்று கைது செய்துள்ளார்கள்.

விகாஸ் துபேயை கைது செய்ய வரப் போகிறார்கள் என்று காவல்துறையிலிருந்தே தகவல் முன் கூட்டி வந்ததால் நாங்கள் தாக்குதலுக்கு தயாராக இருந்தோம் என்று அந்த அக்னிஹோத்ரி சொல்லி உள்ளான்.

தாக்குதல் நடந்த இடத்தில் உள்ள சௌபேபூர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், தாக்குதல் நடந்த இடத்திலிருந்து தாக்குதல் காலத்தில் எஸ்கேப் ஆனதால் ஏற்கனவே இடை நீக்கத்தில் உள்ளாராம்.

விகாஸ் துபேவிற்கு தகவல் சொன்னதும் அவராகத்தான் இருக்கும் என்று சந்தேகப்படுகிறார்கள். இதில் சந்தேகம் ஏன்? நன்றாகவே தெரிகிறது, அந்த ஆள்தான் ரௌடிகளின் இன்ஃபார்மர் என்று.

தமிழ்நாட்டில் ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்று இருப்பது உத்திரப் பிரதேசக் காவல்துறையில் ஃப்ரண்ட்ஸ் ஆப் ரௌடிஸ் என்று அமைப்பு வைத்துள்ளார்கள் போல.

உபி மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பது இந்த சம்பவத்தின் மூலம் அம்பலாகி விட்டது. 

ஆனால் இதைப் பற்றி எல்லாம் பில்லா ரங்கா கிரிமினல் கூட்டாளிகள் வாய் திறக்க மாட்டார்கள் . . .



No comments:

Post a Comment