திருவனந்தபுரம் கோயில் நிர்வாகம் முந்தைய திருவாங்கூர் அரச குடும்பத்திற்குத்தான் சொந்தம் என்ற தீர்ப்பு ஆச்சர்யமோ, அதிர்ச்சியோ அளிக்கவில்லை.
இது எதிர்பார்த்தது.
தீர்ப்பு வழங்கிய நீதியரசர்கள் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று தீர்ப்பு வழங்கிய அதே நீதிமான்கள்தான்.
ஆகவே திருவனந்தபுரம் பத்மநாபர் ஆலயத்தில் திறக்கப்படாத பொக்கிஷ அறை பூட்டியபடியே இருக்கும்.
அதைத் திறந்தால் அரபிக்கடல் உள்ளே வரும்,
அந்த பொக்கிஷ அறையை நாகம் பாதுகாத்து வருகிறது. அது யார் திறக்கிறார்களோ, அவர்கள் கண்ணை குருடாக்கி விடும்
போன்ற கட்டுக்கதைகள் இன்னும் பல்லாண்டுகளுக்கு உலாவும்.
இந்த நிலைமையில் போனால்
மீண்டும் மன்னர் மானியம் வழங்கப்பட வேண்டும்,
மீண்டும் ராஜ்ஜிய உரிமை பழைய மன்னர்களின் வாரிசுகளுக்கே அளிக்கப்பட வேண்டும் போன்ற தீர்ப்புக்கள் வந்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.
மாலன் போன்றவர்கள் வரவேற்றிருப்பதிலிருந்தே இது ஒரு பிற்போக்குத்தனமான தீர்ப்பு என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment