Tuesday, July 21, 2020

அவரே அவருக்கு நிகரானவர் . . .



நடிகர் திலகத்தின் நினைவு நாளன்று அவர் பற்றி வசனகர்த்தாவும் இயக்குனருமான அஜயன் பாலா எழுதியதை பகிர்ந்து கொள்கிறேன்.

நடிப்புக்கலை என்பது வேறு சினிமா நடிப்பு வேறு நடிப்புக் கலை ஒரு கடல் என்றால் அதில் ஒரு கையளவு மட்டுமே போதும் சினிமாவில் நடிக்க . இந்த அளவை தீர்மானிப்பது கதையும் இயக்குனரின் ரசனையும் .

இன்று சினிமாவுக்கு நடிக்கவே வேண்டாம் வாழ்க்கையில் அன்றாட,ம் நடப்பதைப் போல நடந்துகொண்டாலே கூட போதும் .. உண்மையில் அது போன்று நடிக்க மனதில் சில தயாரிப்புகள் மட்டுமே போதும் . சிலர் இதை மன நடிப்பு என்று கூட சொல்லுவர் .... 

ஒரு சிறந்த இயக்குனர் யாரை வேண்டுமானாலும் அந்த நடிப்பில் ஒருவனை தயார் செய்துவிடமுடியும் . அவர்களை இயக்குனர்களின் நடிகன் என்று சொல்லலாம். ஆனால் நடிப்புக்கலைஞன் என்பவன் அப்படியல்ல. அவன் மனத்தோடு உடலையும் பாத்திரத்துக்கு ஏற்ப முழுமையாக தயார்படுத்துவான். நடிப்பு கலையாக அப்போதுதான் பரிணாமம் பெறும் . 



மெதட் ஆக்டிங்கில் புகழ்பெற்ற பிராண்டோவும் சரி நம் பாரம்பர்ய நடிப்பில் தேர்ச்சிபெற்ற சிவாஜி அவர்களும் சரி இதில் விதிவிலக்கில்லை. காரணம் இருவருமே நாடகத்திலிருந்து உருவானவர்கள் . உடல் மொழி தான் அங்கு பிரதானம். ஒவ்வொருவருக்கும் நடைமுதற்கொண்டு ஒரு தனித்தன்மை இருக்கும் . 

பாத்திரமாக அதை ஏற்றபின் அதை ஆழ்மாக உள்வாங்கும் கலைஞன் உடல் முழுக்க பிரதிபலிக்க வேண்டும் . இப்படிப்பட்ட முழுமையான நடிகர்கள் நடிக்கும் போது இயக்குனர்களுக்கு ஒரு வசதி என்ன வென்றால் அவர்களை நடிக்க வைத்துவிட்டு காமிரா கோணத்தை எப்படி வேண்டுமானலௌம் இயக்கலாம் .பாத்திரத்தின் உணர்வு துல்லியமாக பார்வையாளனை சிறைபிடிக்கும் .

ஆனால் உடல் மொழி தெரியாத சினிமா நடிப்புக் கலைஞர்கள்் தடுமாறூவர் . காமிராவுக்கு முகம் காண்பித்தபடி வசனம் பேசி நடிக்கும்போது மட்டுமே அவர்கள் திறமை வெளிப்படும். பிராண்டோவுக்கு கிடைத்த சூழல் இயக்குனர்களின் தொழில்நுட்ப பிரயோகம் திரைக்கதையின் மேதமை  சிவாஜிக்கு கிடைக்காமால் போனது துரதிர்ஷ்டமே

சிவாஜியை மிகை நடிப்பு என விமர்சனம் செய்பவர்கள் வெட்கப்பட வேண்டியது இதற்குத்தானேயொழிய அவரது நடிப்புத்திறனுக்காக அல்ல


இன்று சிவாஜி எனும் மகத்தான நடிகனின் நினைவுநாள்

நடிகர் திலகத்தின் நினைவாக அவரது பாடல் காட்சி ஒன்றை பகிர்ந்து கொள்கிறேன்.


நாளை சில காட்சிகள் மற்றும் இன்னும் கொஞ்சம் பாடல்களை பகிர்ந்து கொள்ளலாம் என்றுள்ளேன்.

2 comments:

  1. அருமையான பாடலோடு சிவாஜி நினைவலைகள் அற்புதம்

    ReplyDelete