மோடியின் வீர தீர
லடாக் திக் விஜயத்தைப் பற்றி வசூல் ராஜா, MBBS படக் காட்சியோடு இணைத்து காலையில்
எழுதியிருந்தேன்.
உன்னிப்பாக கவனித்து பார்த்தால் வசூல் ராஜா படத்தில் ஹாஸ்பிடல்
செட்டிங் நன்றாகவே போட்டிருப்பார்கள். நோயாளிகள் கூட தத்ரூபமாக இருப்பார்கள்.
ஆனால் மோடியின் செட்டிலோ, எந்த ஒரு நோயாளி பக்கத்திலும்
வழக்கமாக எல்லா மருத்துவ மனைகளிலும் சாதாரணமாக இருக்கக் கூடிய எந்த ஒரு உபகரணமும்
இல்லை. யாருக்கும் காயமோ, கட்டோ இல்லை. குளுக்கோஸ் ஏற்றுவதற்கான ஸ்டாண்ட் கூட
இல்லை. அது மட்டுமா, அந்த கான்பிரன்ஸ் ஹாலில் உள்ள எல்.சி.டி ப்ரொஜக்டரைக் கூட
அங்கிருந்து எடுக்கவில்லை. ஏன் அங்கே ஒரு டாக்டர், நர்ஸ் கூட இல்லை.
வசூல் ராஜாவில் நோயாளியாய் ஒருவர் “ஏண்டா உனக்கென்ன அவார்டா
தரப் போறாங்க” என்று கமலஹாசன் திட்டுமளவு பெர்ஃபார்மன்ஸ் காண்பித்திருப்பார்.
இங்கேயே எல்லோரும் யோகாசன போஸில் அமர்ந்திருக்கிறார்கள்.
இந்த லட்சணத்துல மோடியின் நிழலை சிங்கம் மாதிரி போட்டோஷாப்
செஞ்ச அசிங்கம் எல்லாம் வேற . . .
எதையும் ந;ல்லா ப்ளான் பண்ணி செய்யனும் மோடி.
இல்லைன்னா அசிங்கப்பட்டுக் கொண்டே இருக்கனும்.
ஆனாலும் நீங்க திருந்தப் போறதும் கிடையாது. அசிங்கப்படறதும்
நிக்கப் போறது கிடையாது.
அரசியல்ல இதெல்லாம் சகஜம்தானே.
ReplyDeleteஅசிங்கம் அப்படி ஒரு வார்த்தை அவங்க அகராதியில இல்லையாம்