உலக கவிதை தினமாம் இன்று -
சொல்கிறார்கள்.
உலக காடுகள் தினமும் இன்றுதானாம் -
சொல்கிறார்கள்.
காட்டைப் பற்றி கவிதை?
காட்டிற்குள் சென்று கவிதை?
காடுகள் கொன்று
நாடுகள் வளர்க்கும்
நாட்கள் இப்போது . . .
இன்னும் உயிர் வாழும்
காடுகளே கவிதைகள்.
காடுகள் வாழ்ந்தால்
கவிதைகள் வாழும்.
காடுகளைக் காதலித்தால்
கவிதைகளும் ஊற்றெடுக்கும்.
காடே கவிதை . .
காடன்றி ஏது கவிதை ???
இயற்கைக்கு வேண்டாம்
இனி இரங்கற்பா
காடுகள் அழித்து ஆன்மிகம்(?) வளர்க்கும்
ReplyDeleteதாடிகள் ஒழிந்தால் கானகம் வாழும்...
🌸🌸🌸
ஆம் தோழர்.
Deleteஅதுதான்
போன வருடம் எழுதியது
https://ramaniecuvellore.blogspot.in/2017/03/blog-post_31.html