Thursday, March 29, 2018

பாஜகவிற்கு இல்லாத உரிமையா?




தேர்தல் ஆணையர் யார் என்பதை அவர்கள்தான் முடிவு செய்வார்கள்.

எந்த தொகுதிகளில் எந்த அதிகாரிகள் இருக்க வேண்டும் என்பதை அவர்கள்தான் முடிவு செய்வார்கள்.

தேர்தல் தேதிகளை எப்போது அறிவிக்க வேண்டும் என்பதையும் அவர்கள்தான் முடிவு செய்வார்கள்.

எந்தெந்த வாக்குச்சாவடிகளில் கலவரம் செய்வது என்று அவர்கள்தான் முடிவு செய்வார்கள்.

எந்தெந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரம் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும், எங்கே மோசடி செய்ய வேண்டும் என்று முடிவு செய்வதும் அவர்கள்தான்.

எந்த இடத்தில் ஊடகத்தாரை அனுமதிப்பது, எங்கே மறுப்பது என்பதை நிர்ணயம் செய்வதும் அவர்கள்தான்.

இப்படி தேர்தல் குறித்த சகல முடிவுகளை எடுக்கும் சர்வ வல்லமை படைத்த பாஜக கட்சிக்கு தேர்தல் தேதிகளை மட்டும் முன் கூட்டியே அறிவிக்கும் உரிமை கிடையாதா என்ன?

யாருங்க அந்த தேர்தல் ஆணையர்?

இவர்களால் நியமிக்கப்பட்ட ஒரு அடிமைதானே! அடிமை செய்ய வேண்டிய வேலையை ஆண்டையே எடுத்துக் கொண்டார்.

2 comments:

  1. Super ..ithu thaan unmai..eppadiyo north indian mutta pasangalukku therinja sari..ivanunga inimel janmaththukkum varakkoodathu ..

    ReplyDelete
    Replies
    1. அருமையாக சொன்னீங்க சஞ்சய்

      Delete