Wednesday, March 7, 2018

செக்கு, சிவலிங்கம் பேதம் தெரியா . . . .

நக்குகிற நாய்க்கு செக்கென்டு தெரியுமா? சிவ லிங்கம் தெரியுமா?

என்று கேட்பது போல 

லெனினுக்கும் இந்தியாவிற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கும் சில ஜென்மங்கள் உள்ளது. நாய் வாலைக் கூட நிமிர்த்து விட முடியும். இந்த கேடு கெட்டவர்களின் கோணல் புத்தியை சரி செய்யவே முடியாது.

இருப்பினும் சில பதிவுகளை பகிர்ந்து கொள்கிறேன். 

மாட்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட முன்னணித்தலைவர் தோழர் வெ.மன்னார் அவர்களின் பதிவு சூடானது, சுவையானது. 

லெனினுக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு? என்று உண்மை வரலாறு தெரியாத, தெரிந்து கொள்ள விரும்பாத மூடன் ராஜா கேட்கிறார்!

சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என்று பெருமை பேசி வந்த பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தின் காலனி நாடுகள் விடுதலைக்கு அரும்பாடுபட்டவர், அந்த வகையில் இந்தியா பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெறவும்,இந்திய விடுதலை இயக்கத்திற்கு சோவியத்யுனியனின் முழு ஆதரவையும் தந்தவர் தோழர். லெனின்.!

இந்தியாவில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து கம்யூனிஸ்டுகள் கையாள வேண்டிய அணுகுமுறை குறித்து ஆலோசனை தந்தவர். குறிப்பாக காந்தியின் தலைமையில் நடைபெற்ற சுதந்திர இயக்கத்தோடு இணைந்து ஆங்கிலேயரை எதிர்க்க வேண்டும் என்று கூறியவர்!


திலகரை ஆங்கில ஏகாதிபத்தியம் கைது செய்தபோது அதை எதிர்த்து பிரம்மாண்டமான வேலைநிறுத்தம் செய்த தொழிலாளிவர்க்கத்திற்கு பாராட்டைத் தெரிவித்தவர்.

தொழிலாளி வர்க்கம் போக வேண்டிய வழியை சரியாக வந்தடைந்தது என்று மகிழ்ச்சி தெரிவித்து ஊக்குவித்தவர்.

அக்காலத்தில் பிரிட்டீஷாருக்கு எதிராக ஆயுதமேந்திய போராடியவர்களும் சரி,அமைதி வழி போராடியவர்களுக்கும் சரி லெனினே அனைவருக்கும் ஆதர்ச நாயகனாக இருந்தார்.

லெனினை காங்கிரஸ் மாநாடுகளில் திலகர் உட்பட பலர் பாராட்டிப்பேசியுள்ளனர்.

தேச சுதந்திரம் வேண்டி போராடிய அனைவருக்கும் ஆதரவு தந்தவர் என்பது மட்டுமல்ல, இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுக்கு தான் எழுதிய பல நூல்கள் மூலம் வழிகாட்டியவர்.

தியாகி பகத்சிங் லெனின் நூலால் கவரப்பட்டவர் என்பது மட்டுமல்ல,தூக்கிலேறும் போதும் லெனின் எழுதிய அரசும் புரட்சியும் என்ற நூலை படித்துக்கொண்டிருந்தவர். அந்த நூலைப்படித்து முடிக்கும் வரை தூக்கிலிடுவதை சற்று தாமதியுங்கள் என்று கேட்டவர். 

அவர் லெனின் நூலை உண்மையில் படிக்கவில்லை. அவரின் நூலை படிக்கும் போதெல்லாம் அவரோடு பேசுவதாகவே கருதியவர். ஆகவேதான் ஒரு புரட்சியாளனோடு பேசிக்கொண்டிருக்கிறேன் சற்று பொறுங்கள் என்று கூறியவர்.

கவி பாரதியால் போற்றப்பட்டவர்,பாடப்பட்டவர்.

மூட ராஜாவே என் சிற்றறிவுக்கு தெரிந்தவரை லெனினுக்கும் இந்தியாவுக்குமுள்ள தொடர்பைப்பற்றி கூறியுள்ளேன். 


இதைவிடவும் விவரம் அளிக்கக்கூடிய பாட்டன்,முப்பாட்டன்கள் இருக்கிறார்கள். அவர்கள் மேலும் தருவார்கள்.

கம்யூனிசத்திற்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பா என்று கேட்கிறாய்? அது தொப்புள் கொடி உறவடா!

உன் ராஜகுரு இட்லரை வெற்றி கண்டது எங்கள் ரத்தத்தின் ரத்தமடா!

உலகம் முழுவதும் சுரண்டலுக்கு எதிராக போராடும் தொழிலாளிவர்க்கம் அனைத்தும் ஒரே வார்ப்பில் பிறந்த பிறப்புகளடா?

இந்தியாவில் காவியைத்துடைத்தெறியும் வல்லமை கொண்ட சிவப்பின் ஒரே படையின் அங்கங்களடா?

லெனின் சிலையை அகற்றலாம்! ஆனால் அவருடைய சிந்தனையை சுரண்டலுக்கு எதிராக போராடுபவர்களின் நெஞ்சங்களிருந்து மட்டுமல்ல, அதை அடக்குபவர்களின் நெஞ்சங்களில் இருந்தும் அகற்ற முடியாது முட்டாளே!

வேறு சில கருத்துக்கள்






2 comments:

  1. Killer lenin was irrelevant and hated in his country of birth and his statue was removed after glasnost. Certainly India does not need him and his violent devotees. Keep him with your chinese masters. Only unpatriotic slaves will praise and worship him.

    ReplyDelete
    Replies
    1. Thank You. you proved and gave justice to my title.
      Then don't make comedy.

      What is the role of Saffron in freedom struggle?
      காட்டிக் கொடுத்த களவாணிக்கூட்டம் எல்லாம்
      வாயை மூடிக்கிட்டு போயிடனும்.

      திரிபுராவில் யார் கூட கூட்டணி வச்சீங்க?

      அசிங்கமா பேச வைக்காதீங்க.

      Delete