Monday, March 19, 2018

ஜெயமோகனை வச்சு செய்யப் போறாங்க!




முதல் அறிவிப்பு வந்த போதே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். ஐந்து அறிவிப்புக்கள் வந்த பின்பும் பகிர்ந்து கொள்ளாவிட்டால் எப்படி!

ஆம். எனக்கு அது மகிழ்ச்சியான அறிவிப்பு.

தமிழ் இலக்கிய வியாதியும் தாதாவுமான உளறுவாயன் என்று தோழர் ஆதவன் தீட்சண்யாவால் அன்போடு அழைக்கப்படுகிற ஜெயமோகனை அம்பலப்படுத்திய பல கட்டுரைகளின் தொகுப்பு ஒரு நூலாக வரவுள்ளது. இதற்கான முன்முயற்சிகளை எடுத்துள்ள தோழர் யமுனா ராஜேந்திரன் முகநூலில் வெளியிட்டுள்ள நான்கு அறிவிப்புக்களையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

காவியின் குரலாக மிகுந்த வன்மத்தோடு அறம் சிறிதும் இல்லாமல் பொய்ப் பிரச்சாரம் செய்வதையே பிழைப்பாகக் கொண்டுள்ள ஜெயமோகனின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றும் முக்கியமான பணியை கையில் எடுத்துள்ள தோழர் யமுனா ராஜேந்திரன் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

மிகுந்த ஆவலோடு எதிர்பார்க்கிற நூல் இது.

பின் குறிப்பு :

ஜெமோ அடிப்பொடிகள் ஏற்கனவே மிகுந்த பதட்டமடைந்து விட்டார்கள் என்பதை தோழர் யமுனா ராஜேந்திரன் அவர்களுக்கு ஜெமோ ரசிகர் மன்ற தலைவர் கே.வி.அரங்கா வெளியிட்ட பின்னூட்டம் மூலம் தெரிகிறது. வழக்கமாக ஜெமோ பற்றி என்ன எழுதினாலும் சில அனாமதேயங்கள் வசையை வாந்தி எடுத்து விட்டுச் செல்லும். இப்போது பதட்டத்தில் வேறு இருக்கிறார்கள்.  வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் கைப்பிள்ளை வேறு நினைவுக்கு வருகிறார். எத்தனை தலை உருளப் போகுதோ! பயமா இருக்கு!

இப்போ அந்த  ஐந்து  அறிவிப்புக்களையும் படித்து விடுங்கள்

அறிவித்தல்

*
அம்பேத்கார், பெரியார், மார்க்சியர், இஸ்லாமியர், கிறித்தவர், ஈழத்தமிழர் மற்றும் இடதுசாரி கலாச்சார அரசியல் தொடர்பான ஜெயமோகனின் அவதூறுகளுக்கு எதிராக ஆதாரங்களுடன் எழுதப்பட்ட ஆணித்தரமான கட்டுரைகளின் தொகுப்பு ஒன்றைக் கொண்டு வருவதற்குத் திட்டமிட்டிருக்கிறோம். இத்தகைய தொகுப்பு இன்றைய இந்துத்துவப் பாசிசக் காலத்தின் தேவை என உணர்ந்திருக்கிறோம். இடதுசாரி பதிப்பகமொன்றும் நூலைக் கொணர மகிழ்வுடன் ஓப்புதல் அளித்திருக்கிறது. யாம் அறிந்த சிலரது கட்டுரைகளுக்கு பிரசுர ஒப்புதல் கேட்டிருக்கிறோம். வாசகர்கள் அறிந்த இவ்வாறு எழுதப்பட்ட முக்கியமான கட்டுரைகள் குறித்து எங்களுக்கு அறியத்தந்தால் அவற்றையும் இந்தத் தொகுப்பில் உள்ளிட முடியும். நூலை இரு மாத இடைவெளியில் கொண்டு வருவது எமது திட்டம்..

ஜெயமோகனின் அவதூறுகள் அறிவித்தல் - 2
*
ஜெயமோகனின் அவதூறுகளுக்கான பதில் கட்டுரைத் தொகுப்புக்கு ஒரே நாளில் 11 கட்டுரைகளை நண்பர்கள் அனுப்பியிருக்கிறார்கள். 15 ஆம் திகதி வரை கட்டுரைகள் கேட்கப்பட்ட மற்ற நண்பர்களுக்காகக் காத்திருப்பது உத்தேசம். கட்டுரைகள் மிக மிக நீளமானவை என்பதால் 15 கட்டுரைகளை மட்டுமே தொகுப்பது இலக்கு. தொகுப்பில் இந்தக் கட்டுரைகளின் இன்றைய தேவை குறித்த ஒரு விரிவான முன்னுரை இடம்பெறும். அனைத்து வேலைகளையும் முடித்து மே மாதம் மத்தியில் நூலைக் கொண்டுவருவது திட்டம்..

ஜெயமோகனின் அவதூறுகள் அறிவித்தல் - 3
இதுவரையிலும் 14 கட்டுரைகள் கிடைத்துவிட்டன. இன்னும் இரு கட்டுரைகளுக்குக் காத்திருக்கிறோம். 15 ஆம் திகதி பனுவல் திரட்டலை இறுதி செய்கிறோம். தொகுப்பு மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், பெரியார், அம்பேத்கர், இஸ்லாமியர், கிறித்தவர், ஈழத் தமிழர் குறித்த ஜெயமோகனின் அவதூறுகளுக்கு எதிரான ஆதாரங்களுடனான விரிவான கட்டுரைகளைக் கொண்டிருக்கும். முதலில் இலக்கியம் குறித்த கட்டுரைகளை நாம் யோசிக்கவில்லை. இப்போது 6 கட்டுரைகள் அது குறித்து வந்துள்ளதால் அதனை நிறைவு செய்யும் பொருட்டு ‘பின் தொடரும் நிழலின் குரல்’ நாவல் குறித்த ஒரு மறுப்புக் கட்டுரையும் தொகுப்பில் இடம்பெறும். தொகுப்பை அம்பேத்கர் குறித்து நூற்களை எழுதிய தோழர். பிரபாகரனும் நானும் எடிட் செய்கிறோம். நிச்சயம் நூல் மே மாதம் இரண்டாம் வாரம் வந்துவிடும்..

ஜெயமோகனின் அவதூறுகள் அறிவித்தல் - 4
*
பெரியார் மற்றும் திராவிட இயக்கம் குறித்த அவதூறுகள், அம்பேத்கார் பற்றிய அவதூறுகள், மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் மற்றும் ரஸ்யப் புரட்சி குறித்த அவதூறுகள், ஜெயமோகனின் உளவியல் பாசிசம், ஈழத்தமிழர் குறித்த அவதூறுகள், ஜெயமோகனின் இலக்கிய பாசிசம், மான்ட்டோ குறித்த அவதூறுகள், ஜெயமோகனின் ‘உலோகம்’ மற்றும் ‘பின்தொடரும் நிழலின் குரல்’ நாவல்கள், அருந்ததிராய், ஜான் ஆப்ரஹாம், இஸ்லாமியர், கிறித்தவர் குறித்த அவதூறுகள் என இயைனைத்தும் பற்றிய 8 படைப்பாளிகளின் 18 கட்டுரைகளின் தொகுப்பு. படைப்பாளிகளிடம் முறைப்படி அனுமதி பெற்று தொகுப்பு வெளியாகிறது. ஹிட்லர், கோயபல்ஸ், சாவர்க்கர், கோல்வார்கர் போன்றோரது பாசிசச் சிந்தனையின் தொடர்ச்சியாக ஜெயமோகனை முன்வைத்து மதிப்பீடு செய்யும் கட்டுரையாக முன்னுரை அமையும். பனுவல் தேர்வு இறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்துத்துவ பாசிசத்தின் கலாச்சார முகம் ஜெயமோகன் என்பதை இத்தொகுப்பின் கட்டுரைகள் நிறுவுகிறது. தொகுப்பு மே மாதம் இரண்டாம் வாரம் வெளியாகும். தொகுப்பை பிரபாகரனும் யமுனா ராஜேந்திரனும் மேற்கொள்கிறார்கள்..

ஜெயமோகனின் அவதூறுகள் பற்றிய தொகுப்பு நூல் : 5
*
1.பெரியார் மற்றும் திராவிட இயக்கம் பற்றிய அவதூறுகள் குறித்து பொதிய வெற்பன் 
2.விளிம்புநிலை மக்கள் மீதான பாசிச அவதூறுகள் குறித்து அரவிந்தன் சிவக்குமார்
3.அம்பேத்கர் குறித்த அவதூறுகள் பற்றி பிரபாகரன்
4.சதத் ஹசன் மாண்ட்டோ குறித்த அவதூறுகள் குறித்து ஜமாலன்
5.ஈழத்தமிழர் குறித்த அவதூறுகள் பற்றி தமிழ்நதி
6.கார்ல் மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், அருந்ததிராய், ஜான் ஆப்ரஹாம், இஸ்லாமியர், கிறித்தவர் மற்றும் ரஸ்யப் புரட்சி குறித்த அவதூறுகள் பற்றி யமுனா ராஜேந்திரன்
7.ஜெயமோகனின் திசையழிந்த அத்துவான வெளி குறித்து ந.ரவீந்திரன்

*
8.நான் கடவுள் திரைப்படம், சங்கத் சித்திரங்கள் நூல், சிறுகதை வடிவம் குறித்து கௌதம சித்தார்த்தன்
9.உலோகம் நாவல் குறித்து மோகன் ராமய்யன், தமிழ்நதி, யமுனா ராஜேந்திரன்
10.விஷ்ணுபுரம் நாவல் குறித்து பொதியபெற்பன்
11.பின் தொடரும் நிழலின் குரல் நாவல் குறித்து யமுனா ராஜேந்திரன்
என 9 ஆளுமைகளின் 20 கட்டுரைகள்.
இத்தோடு 12. ஜெயமோகன் குறித்த ‘மார்க்சியர்’ கோவை ஞானியின் பார்வையை மறுதளிக்கும் யமுனா ராஜேந்திரன் கட்டுரை.
13.ஜெயமோகன் இந்துத்துவ பாசிசத்தின் கலாச்சார முகம் என்பதை நிறுவும் ஒரு முன்னுரை.
இதுவே நூலின் உள்ளடக்கம்.
பிரபாகரனும் யமுனா ராஜேந்திரனும் நூலின் எடிட்டர்கள்.
நூல் மே மாதம் இரண்டாம் வாரம் வெளியாகும்..

4 comments:

  1. ஒரு எழுத்தாளரை எதிர்த்து இத்தனை ரவுடிகளா ?
    உண்மையில் ஜெமோ பெரிய கில்லாடிதான் போல

    ReplyDelete
    Replies
    1. பாஸ், ரியாக்சனில் ஃபீலிங்கே இல்லையே?
      இன்னும் அதிகமாக எதிர்பார்க்கறேன்.
      ஜெமோ ரசிகர் மன்ற ஆளுக்கான தகுதியே இல்லையே!
      Try once more

      Delete
    2. ஜெமோ கதைகளை படிச்சதில்லை
      ஆனால்
      அத்தனை ரவுடிகளும் ஜெமோ பெரிய கில்லாடி யாக இருப்பார் என்று நினைக்கின்றேன்

      Delete
    3. பாஸ் போதாது.
      உங்களால் கூட ஜெயமோகனைப் பற்றி ஒரு யூகமாகத்தான் சொல்ல முடிகிறது.
      ஜெமோவைப் ப்ற்றி எதுவுமே தெரியாத மாதிரி நடிக்க ட்ரை செய்யறீங்க! ஆனா அவரை அம்பலப்படுத்துபவர்களை ரௌடி என்று ஜெமோ பாணியில் வசை பாடி உங்களை அம்பலப்படுத்திக் கொள்றீங்க!
      பாவம் Better Luck next Time

      Delete