Friday, March 9, 2018

கோர்ட்டின் மகளிர் தின பரிசு




சர்வதேச மகளிர் தினத்தன்று உச்ச நீதி மன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஹாதியா வழக்கில் அந்த பெண்ணின் திருமணத்தை ரத்து செய்த கேரள உயர்நீதி மன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

திருமண வயதுடைய ஓரு பெண் யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் எல்லாம் நீதி மன்றம்  தலையிட முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. யாரை திருமணம் செய்து கொள்வது என்பதில் பெற்றோரே தலையிட முடியாது என்ற நிலையில் இங்கே நீதிமன்றங்களுக்கு  வேலை கிடையாது என்று ஆணித்தரமாகச் சொன்ன உச்ச நீதிமன்றம்  ஹாதியா தன் கணவனோடு செல்லலாம் என்றும் கூறி விட்டார்கள்.

“லவ் ஜிஹாத்” என்று வதந்தியை கிளப்பி விட்டு கலவரத்தைத் தூண்டி அதிலே குளிர் காய நினைத்த காவிக் கூட்டத்தின் முயற்சி தோற்றுப் போனது நிம்மதி அளிக்கிறது.

இந்த வழக்கு போல எல்லா வழக்குகளிலும் தெளிவாக இருந்தால் நல்லது.


No comments:

Post a Comment