முக நூலில் ஒரு பதிவு பார்த்தேன்.
காரைக்குடி பக்கத்தில் இருக்கிற அரியக்குடியில் உள்ள பெருமாள் கோயிலில் கோயிலை உருவாக்க, திருப்பணி செய்ய உதவிய சில நகரத்தார் இனத்தைச் சேர்ந்தவர்களின் சிலையில் புதிதாக இப்போது நாமம் வரைந்துள்ளார்கள். வைணவக் கோயிலுக்கு உதவி செய்தாலும் நகரத்தார் எப்போதுமே சைவர்கள்தான். அவர்களுக்கு இப்படி வைணவ அடையாளம் கொடுப்பது நியாயமா என்பது அவரது ஆதங்கம்.
இதெல்லாம் ஒரு பிரச்சினை என்று எழுத வந்து விட்டீர்களா என்ற மைன்ட் வாய்ஸ் கேட்கத்தான் செய்கிறது.
ஒரே மதம் என்று சொல்லிக் கொண்டாலும் அதற்குள்ளே உள்ள முரண்பாடுகளையும்
ஆதிக்க உணர்வையும்
வெளிக்காட்டுகிறது இந்த சர்ச்சை.
சரி இருக்கட்டும். இது
பக்த்ர்களுக்குள் உள்ள பிரச்சினை, இதை நாங்கள் பேசித் தீர்த்துக் கொள்வோம் என்று சொல்கிறீர்களா?
சரி, தாராளமாக செய்து கொள்ளுங்கள் . . .
காரைக்குடிக்குப் பக்கத்தில் உள்ள கோயில் சம்பந்தப்பட்ட சர்ச்சை என்பதால் காரைக்குடிக்காரர் எச்.ராசா இதிலே என்ன நிலை எடுத்து யார் பக்கம் நிற்கப் போகிறார் என்று அறிந்து கொள்ள கொஞ்சம் ஆர்வமாக உள்ளது.
நாமம் நீடிக்கட்டும் என்பாரா
இல்லை எடுக்கச் சொல்வாரா
இல்லை
கலவரத்துக்கு வாய்ப்பில்லை
என்பதால் ஒதுங்கி
ஓடி விடுவாரா?
கோயிலுக்குச் சென்றிருக்கிறேன். பொதுவாக சிவ கோத்திரம் என்றாலும் கார்த்திகையில் முருகனை ஒரு சாராரும் புரட்டாசியில் பெருமாளை ஒரு சாராரும் வணங்குவார்கள்
ReplyDelete