Tuesday, March 20, 2018

கேலிக்கூத்தாய் ஒரு 144




சட்டம் ஒழுங்கை பராமரிப்பது என்ற பெயரில் ஜன நாயகத்தை முடக்க ஆட்சியாளர்கள் பயன்படுத்தும் ஒரு மோசமான ஆயுதம் 144 தடை உத்தரவு.

அந்த பிரிவின்படி தடை உத்தரவு போடப்பட்டாலும் சவ ஊர்வலம் தவிர வேறு எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி மறுக்கப்படும். நான்கு பேர் சாலையில் ஒன்றாகக் கூட செல்லக்கூடாது. மீறிச்சென்றால் போலீஸின் குண்டாந்தடி பிரயோகிக்கப்படும்.

கலவரத்தை உருவாக்கி அதிலே குளிர் காய வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு காவிகள் ராம ராஜ்ய யாத்திரை என்ற பெயரில் ஒரு ர(த்)த யாத்திரை நடத்துகிறார்கள். கர்னாடகாவிலும் கேரளாவில் மக்களால் புறக்கணிக்கப்பட்டதால் வெறி கொண்டு தமிழகத்தில் நுழைகிறது யாத்திரை.

எச்.ராசா உள்ளிட்டவர்களின் வெறித்தனமான பேச்சால் ஏற்கனவே தகித்துக் கொண்டிருக்கிற தமிழகத்தில் இந்த ரத்த யாத்திரையை அனுமதிக்கக் கூடாது என்று பல அமைப்பினர் போராடுகின்றனர். அதனால் நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு போடப்படுகிறது.

அப்படியானால் ரத்த யாத்திரைக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது என்றுதானே அர்த்தம்?

இல்லை

ரத்த யாத்திரை தொடரும். காவிகளின் வெறியாட்டத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கும். ஆனால் ரத்த யாத்திரிக்கைக்கு எதிரானவர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள். கைது செய்யப்படுவார்கள்.

தடை உத்தரவு என்றால்  அது அனைவருக்கும் பொதுதானே! ஒரு பிரிவை இஷ்டம் போல என்ன வேண்டுமானால் செய்து கொள் என்று சுதந்திரமாக சுற்றித் திரிய விட்டு இன்னொரு பிரிவை தடுப்பது என்ன நியாயம்?

இவ்வளவு கேவலமாக நடந்து கொள்ள எடுபிடி வகையறாக்களால் மட்டுமே முடியும்.


2 comments:

  1. china-licking comrades, foreign secular slaves and bloody jihadis deserve more than section 144. Even shoot-at-sight order would be appropriate and justified against these violent criminal thugs.

    ReplyDelete
    Replies
    1. குண்டாந்தடிகளையும் துப்பாக்கித் தோட்டாக்களையும் சிறைவாசத்தையும் சந்தித்த பாரம்பரியம் எங்களுடையது.
      மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்க, சுதந்திரப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த கோழைகள் நீங்கள்.
      இப்போதும் நான் தைரியமாக என் பெயரில் எழுதுகிறேன்.
      நீ கோழையாய் ஒளிந்து கொண்டு பின்னூட்டம் போடுகிறாய்.
      உனக்கெல்லாம் வீரம் இருந்தா சொந்த அடையாளத்தோடு எழுது பார்ப்போம்

      Delete