Saturday, March 10, 2018

அத்வானிக்கு இந்த இழிவு அவசியமே



திரிபுராவில் புதிய அரசு பதவியேற்பின் போது கை கூப்பி நின்ற அத்வானியை மோடி கண்டுகொள்ளாமல் நகர்ந்து அலட்சியப் படுத்திய காட்சி தொலைக்காட்சிகளிலும் சமூக வலைத் தளங்களிலும் பரவி வருகிறது.

மோடியின் மோசமான குணாம்சத்தை இது காண்பிக்கிறது என்ற வகையில் இது சரி. 

அதைத்தாண்டி அத்வானிக்கு அனுதாபத்தை தெரிவிக்க வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை.

காவிக்கூட்டத்தின் மத வெறி செயல்திட்டத்தை வேகமாக பரப்பிய முதல் குற்றவாளி அத்வானி.

ரத யாத்திரை சென்று ரத்த ஆற்றை ஓட வைத்த கொலை வெறியர் அத்வானி.

பாபர் மசூதி இடிப்பின் முதல் குற்றவாளி அத்வானி.

குஜராத் கலவரங்களின் போது மோடிக்கு முட்டு கொடுத்ததும் அத்வானி.

இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழ கற்றுக் கொடுத்தவர் அத்வானி.

மோடிக்கு முட்டு கொடுத்தவர், அவராலேயே அலட்சியப் படுத்தப்படுவதெல்லாம் இயற்கையின் நீதி.

அவ்வளவுதான்.

ஆகவே அவர் அவமதிக்கப்பட்டு விட்டார் என்று அவருக்காக யாரும் கவலைப்படவோ கண்ணீர் சிந்தவோ அவசியமில்லை.

எந்த ஒரு கொள்கையும் இல்லாத,  எதைச் செய்தாவது நாற்காலியை பிடிக்க வேண்டும் என்று மட்டுமே இருக்கிற பாஜக கட்சியில் இதெல்லாம் சகஜம்தான்.

நாளை மோடியின் பிரதமர் பதவி பறிபோன பின்பு, உ.பி மொட்டைச் சாமியார் மோடியை இப்படி இழிவு படுத்தினாலும் அதிலே அதிர்ச்சியடையவோ ஆச்சரியப்படவோ ஏதுமில்லை. 


பின் குறிப்பு :

ஜார்ஜ் புஷ் நாற்காலியின் மீது கால் போட்டுக் கொண்டு அமர்ந்திருக்க, அத்வானி அடக்கம் ஒடுக்கமாக பவ்யமாக அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படம் முன்பு செய்தித்தாள்களில் வந்தது. நானும் அந்த படத்தை இணையத்தில் தேடித் தேடி பார்க்கிறேன். கிடைக்கவே இல்லை.

எனவே இந்த இழிவெல்லாம் அத்வானிக்கு புதிததல்ல. 




2 comments: