அரவிந்த் கேஜ்ரிவாலை அசிங்கப்படுத்த நினைத்தது மோடி அரசு.
அதற்காக அதன் எடுபிடி தேர்தல் ஆணையத்தை ஏவி விட்டது. ஆம் ஆத்மி கட்சியின் இருபது எம்.எல்.ஏ க்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை அனுப்புகிறார்.
பதவி நீக்கம் செய்வது முறையல்ல. எங்களுக்கு கொடுக்கப் பட்டது பொறுப்பு மட்டுமே தவிர அது ஒன்றும் ஆதாயம் தரும் பதவி அல்ல என்று முறையிட்டனர் அவர்கள். எங்களது தரப்பு வாதங்களை தலைமை தேர்தல் ஆணையர் செவி மடுக்கவே இல்லை. எனவே அவரது பரிந்துரையை ஏற்கக் கூடாது என்று குடியரசுத்தலைவரிடமும் சொல்ல முயற்சித்தார்கள்.
தன்னை குடியரசுத்தலைவராக்கியதற்கான விசுவாசத்தை நிரூபிக்க வேண்டிய அவசியத்தில் இருந்த அவரோ நீட்டிய இடத்தில் கையெழுத்திட்டு இருபது எம்.எல்.ஏ க்களின் பதவியை பறித்தார்.
இதோ, இப்போது டெல்லி உயர்நீதி மன்றம் அந்த உத்தரவு சட்ட விரோதம் என்று சொல்லி பறிக்கப்பட்ட பதவிகளை மீண்டும் வழங்கி விட்டது.
முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல ஜனாதிபதி எடுத்த முதல் முக்கியமான முடிவே சட்ட விரோதம், ஜனநாயக விரோதம் என்றாகி விட்டது.
மோடி வகையறாக்களுக்கு வெட்கம், மான, ரோஷம், சூடு, சொரணை என்று எதுவும் எப்போதும் கிடையாது. எத்தனை பெரிய அசிங்கத்தையும் துடைத்துப் போட்டு விட்டு மீண்டும் அசிங்கப்பட தயாராகி விடுவார்கள்.
ஆனால் ஜனாதிபதி என்பவர் நாட்டின் முதல் குடிமகன்.
இவர்களின் ஆத்திரத்தில் அவசரத்தில் மதியிழந்து செய்த நடவடிக்கையால் அசிங்கப்பட்டது என்னமோ அவர்தான்.
இப்படி ஒரு இழிவு அவசியமா அவருக்கு?
திரு கே.ஆர்.நாராயணன் போல நல்ல ஜனாதிபதியாக செயல்பட இனிமேலாவது அவர் முயற்சிக்க வேண்டும்.
bjp oru naththam pidichcha katchi..karmam
ReplyDeleteSC will overrule HC.Keep your secular face inside sand.
ReplyDeleteநியாயப்படி பார்த்தால் தேர்தல் ஆணைய எடுபிடியும்
Deleteமுதல் குடிமகனும் இத்தனை நேரம் ராஜினாமா
செய்திருக்க வேண்டும்.
உச்ச நீதி மன்றத்தில்தான் எதிர்காலப் பதவிக்காக
காத்திருக்கும் சில நல்லவர்களை வைத்துள்ளீர்களே!
சதாசிவம் போல தீர்ப்பு அளித்தால் அதிலே வியப்பதற்கு
என்ன உள்ளது?