Thursday, March 15, 2018

மகிழ்ச்சிதான் நீதிபதிகளே, வக்கீல்களோடு மட்டும்?




அன்னிய நாட்டு வழக்கறிஞர்களையோ அல்லது வெளி நாட்டு வழக்கறிஞர்கள் நிறுவனங்களையோ இந்தியாவில் தொழில் செய்ய அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்து விட்டது.

இந்திய வழக்கறிஞர்களின் பிழைப்பில் வெளி நாட்டு வழக்கறிஞர்கள் மண்ணை அள்ளிப் போடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ள நீதிபதிகளுக்கு வாழ்த்துக்களும் பூங்கொத்துக்களும். இம்முடிவிற்கு மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ( இந்த பாராட்டை எழுதும் போதே மனதில் அச்சம் வருகிறது. இந்த மகிழ்ச்சியைக் குலைக்க அடுத்து என்ன அதிரடி நிகழுமோ என்ற கேள்வியும் எழுகிறது)

நம் நீதியரசர்களுக்கு ஒரு வேண்டுகோளை இத்தருணத்தில் முன்வைக்க வேண்டிய அவசியம் உள்ளது.

அன்னிய நாட்டு வழக்கறிஞர்களை இந்தியாவில் தொழில் செய்ய அனுமதிக்க முடியாது என்பது வெறும் சட்டப் பிரச்சினையோ, இந்திய வழக்கறிஞர்களின் வாழ்வாதாரம் மட்டும் அடங்கியுள்ளது.

உச்ச நீதிமன்றம் செய்துள்ள ஒரு மிகப் பெரிய புரட்சி.

அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடாது என்று இத்தனை நாட்கள் சொல்லி வந்ததிலிருந்து மாறுபட்டு மத்தியரசின் கொள்கை முடிவில் தலையிட்டு அதனை நிராகரித்துள்ளது பாராட்டுதலுக்குரிய ஒன்று.

இந்த முன்னுதாரணத்தை வழக்கறிஞர்களோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாதீர்கள்.  இந்தியாவின் சுயசார்பு பொருளாதாரத்தை பாதிக்கிற பொதுத்துறை பங்குகள் விற்பனை, பாதுகாப்புத்துறையில்  அன்னிய கம்பெனிகள், சில்லறை வணிகத்தில் வெளி நாட்டு முதலைகள் என்று ஏராளமான பிரச்சினைகளிலும் இது போலவே அரசின் கொள்கை முடிவு என்று சொல்லி ஒதுங்கி விடாதீர்கள்.

வழக்கறிஞர்கள் கண்ணில் வைக்கிற வெண்ணெயை மற்றவர்களுக்கும் அளித்திடுங்கள்.

அவர்களும் உங்கள் கண்கள்தானே? அவர்களுக்கு மட்டும் சுண்ணாம்பு வேண்டாமே!


2 comments:

  1. ஏன் வெளிநாட்டு வக்கிலோட நிறுத்துரீங்க. இந்திய வழக்குகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளையும் நியமிக்கலாம் தப்பில்லை. ஜெயலலிதா தமிழக முதல்வராய் இருந்தபொழுது, தமிழக ஐகோர்ட் நீதிபதிகளின்மீது அவர் அழுத்தம் கொடுக்கலாம் எனற காரணத்துக்காக ஜெயலலிதாவின் வழக்கு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டது. அதுபோல சுப்ரிம் கோர்ட் நீதிபதிகளின்மீது பிரதமர் அழுத்தம் கொடுக்கலாம் எனற காரணத்துக்காக ம்ததியில் ஆளும்கட்சிக்கு எதிரான வழக்குகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளையும் நியமிக்கலாம். குறிப்பாக மனித உரிமை சார்ந்த வழக்குகளுக்கு ஆசிய, ஆப்ரிக்க, அமேரிக்க, ஐரோப்பிய நீதிபதிகளடங்கிய குழுவை நியமிக்கலாம். இல்லாவிட்டால் லோயாக்களின் மரணங்களை தவிற்க்கமுடியாது.

    ReplyDelete
  2. நீங்களே வாதாடும் போது முக்கியமாக செலவு கிடையாது. உங்களை எதிர் தரப்பினர் விலை கொடுத்து வாங்கமுடியாது என்பதால் ஏமாற வாய்ப்பில்லை. வழக்கு முடியும்வரை வேறு வேலை கிடையாது என்பதால், வாய்தா வாங்கமாட்டீர்கள். வழக்கு விரைவில் முடியும்.

    ReplyDelete