மகளிர் உரிமைகளுக்கான போராட்டங்களை நினைவு படுத்துகிற நாள்.
இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக பொங்கி எழுந்த போராளிகளை நினைக்கின்ற நாள்.
சமத்துவத்திற்கான குரலை ஒலிக்கும் நாள்.
மாற்றத்திற்கான பயணத்தில் சற்று இளைப்பாறி எழுச்சி கொண்டு முன்னேறுவதற்கான நாள்.
நிச்சயமாக கொண்டாட்டத்திற்கான நாள் அல்ல.
பாலியல் வன் கொடுமைகள் அதிகரிக்கையில்
பணிப் பாதுகாப்பு குறைந்து வருகையில்
மகளிர் மசோதா வெறும் கனவாய், கானல் நீராய் உள்ளபோது
மகளிர் தினத்திற்கான முக்கியத்துவம் அதிகரிக்கிறது. ஆனால் சர்வதேச மகளிர் தினத்தை முதலாளித்துவ ஊடகங்கள் திட்டமிட்டே வெறும் கொண்டாட்டமாக சுருக்க முயற்சிக்கிறார்கள். அதன் காரணம் தெளிவானது. போராட்ட உணர்வை மழுங்கடிப்பதும், இலக்கை நோக்கிய பயணத்தினை மழுங்கடித்து முடக்கி வைப்பதும்.
பாலின சமத்துவம் நோக்கிய பயணத்தை உறுதியோடு தொடர்வோம் என்ற உணர்வோடு
அனைவருக்கும்
சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment