பாஜக
கட்சியிலிருந்து வெளியேறியுள்ள ஜஸ்வந்த்சிங் சொன்ன ஒரு விஷயம் மிக முக்கியமானது.
இப்போது
நடக்கிற நரேந்திர மோடி பஜனை அவசர நிலைக் காலத்தை நினைவு படுத்துகிறது என்று
ஜஸ்வந்த் சிங் கூறியுள்ளார். அதற்கு பல அர்த்தங்கள் வருகிறது.
அவசர நிலைக்
காலத்தில் அனைத்து ஜனநாயக உரிமைகளும் மறுக்கப் பட்டன. அது போல இப்போது பாஜக விலும்
ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டதாகவும் நாளை இந்தியாவிலும் அது
நிகழலாம் என்று ஜஸ்வந்த்சிங் சொல்வதாக எடுத்துக் கொள்ள முடியும்.
அவசர நிலைக்
காலத்தில் அப்போதைய காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ தலைவர் டி.கே.பரூவா “இந்திராதான்
இந்தியா, இந்தியாதான் இந்திரா” என்று முதலில் முழங்கினார். அதன் பின் அத்தனை
பேரும் அதையே மந்திரம் போல சொல்லிக்கொண்டிருந்தார்கள். இந்த ஜால்ரா சப்தத்தில்
உண்மை நிலவரங்கள், மக்களின் உணர்வுகள் பற்றிய புரிதல்களே காங்கிரஸ் கட்சிக்கு
இல்லாமல் போனது. அது போல பாஜகவும் உண்மை நிலவரத்திலிருந்து விலகி மாய உலகில்
வாழ்வதாக ஜஸ்வந்த் சிங் சொல்கிறாரோ?
இல்லை, அவசர
நிலைக்காலத்திற்கு பிறகு இந்திரா காந்தியும் காங்கிரஸ் கட்சியும் தோற்றுப் போனது
போல நரேந்திர மோடியும் தோற்றுப் போய் விடுவார் என்று ஜஸ்வந்த்சிங் கணிக்கிறாரோ?
ஒரு
வார்த்தைக்குள் எத்தனை விஷயங்கள் அடங்கியிருக்கிறது!
jawanthji would not have thought a communist will interpret his statement like this. you use opportunist persons as you are also opportunis
ReplyDelete100 correct - Sundaram, Trichy
ReplyDelete