Thursday, April 24, 2014

இவர்கள் என்றுமே சட்டங்களை மதிப்பவர்கள் கிடையாது

கீழே உள்ள செய்தி தமிழ் ஹிந்து இணையதளத்தில்  இப்போது
பார்த்தது.
----------------------------------------------------------------------------------------

சென்னையில், ஊழியர்களுக்கு வாக்களிக்க விடுமுறை அளிக்காத விப்ரோ உள்ளிட்ட 5 ஐ.டி. நிறுவனங்கள் மீது தேர்தல் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். 

தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு நாளன்று அனைத்து நிறுவனங்களும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்தது. 

ஆனால், சென்னையில் விப்ரோ, ஹெ.சி.எல்., டெக் மகிந்திரா, சொடெக்ஸோ உள்ளிட்ட ஐ.டி. நிறுவனங்கள் இன்றும் வழக்கம் போல் செயல்பட்டன. 

சோழிங்கநல்லூர் வருவாய் ஆய்வாளர் ஆர். ஜெயந்தி தேர்தல் ஆணைய உத்தரவை மீறி இந்நிறுவனங்கள் இயங்கியதாக தெரிவித்தார்.
மேலும், அங்கு பணிபுரிந்த சுமார் 3,500 ஊழியர்களையும் காவல்துறையினர் உதவியுடன் வெளியேற்றப்பட்டதாக தெரிவித்தனர்.
தேர்தல் ஆணைய உத்தரவை மீறியதாக 5 நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

--------------------------------------------------------------------------------------------------------

தேர்தல் விதிகளை மட்டுமா இவர்கள் மதிக்காமல் இருக்கிறார்கள்?

இந்தியாவின் வரி விதிகளை மதிக்க மாட்டார்கள்.
இந்தியாவின் தொழிலாளர் நலச் சட்டங்களை மதிக்க மாட்டார்கள்.
அவர்கள் நிறுவனம் செயல்படும் நகராட்சிக்கோ, மாநகராட்சிக்கோ
செலுத்த வேண்டிய தொழில் வரி போன்றவற்றை செலுத்த
மாட்டார்கள். 
இந்தியாவின் சுதந்திர தினம், குடியரசு தினம் கூட பொருட்டு
கிடையாது.

தாங்கள் எப்போதும் இந்திய சட்டங்களுக்கு அப்பாற்பட்டவர்கள்
என்ற நினைப்பிலே இருப்பவர்கள்.

இன்று எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை நல்ல தொடக்கமாக
இருக்கட்டும்.

முதலாளிகளுக்கு அடிபணிந்து கிடப்பதே தங்கள் பாக்கியம்
என்ற அடிமை மனப்பான்மையிலிருந்து அரசுகளும்
வெளிவருவதும் மிகவும் முக்கியம்.

2 comments:

  1. தாங்கள் குறிப்பிட்ட நிறுவன ஊழியர்களுக்காவது கை நிறைய சம்பளம்.பி பி ஓ வில் பணிபுரிபவர்கள் குறிப்பாக மெடிக்கல் ட்ரான்ஷ்க்ரிப்பஷனில் வீட்டிலிருந்து பணி புரிபவர்களின் நிலமை கொத்தடிமைகளை விட மோசம்.டாலர் மதிப்பு உச்சகட்டத்தை தொடர்ந்து எட்டினாலும்.லைன் கௌண்ட் ரேட் ஆறு எழு வருடக்களுக்குமுன் நிர்ண்யத்துதான்.கேட்பாரில்லை.நமக்கு ஃபாரின் பணத்தேவை மிகமுக்கியம்.ஷ்விஷ் பேங்க்காரனை ஏமாற்றலாமா..அடிமை,அடிமைபுத்தி,சுயநலம்,இவைகளே நம் பாரம்பரிய குணாதியசயங்கள்.

    ReplyDelete
  2. romba sariyaka sonneerkal

    ReplyDelete