Saturday, April 5, 2014

வேலூரில் ஒரு விஷப் பிரச்சாரம்



http://static.panoramio.com/photos/large/43476812.jpg

வழக்கமாக செல்லும் பெட்டிக் கடையில் நேற்று சில பொருட்கள் வாங்கும் போது முட்டை கேட்ட ஒருவருக்கு ஒரு நோட்டீஸில் முட்டையைக் கட்டிக் கொடுத்தார். அது என்ன நோட்டீஸ் என்று கேட்டு வாங்கினேன். உங்கள் கடைக்கு வருபவருக்கெல்லாம் இந்த நோட்டீசை கொடுங்கள் என்று சொல்லி கொடுத்து விட்டு போனார்கள். வாங்க மாட்டேன் என்று சொன்னால் பின்பு ஏதாவது பிரச்சினை செய்வார்கள். கஸ்டமர்கள் யார் எந்த கட்சி என்று தெரியாமல் அவர்களிடம் இந்த நோட்டீசை கொடுத்தால் அதுவும் பிரச்சினை. அதனால் பொருளை மடித்துக் கொடுக்க பயன்படுத்துகிறேன் என்றார் கடைக்காரர்.

அந்த நோட்டீஸ் இந்து வாக்காளர் விழிப்புணர்வு இயக்கம் என்ற பெயரில் வெளியிடப்பட்டிருந்தது. அப்பட்டமான மத வெறிப் பிரச்சாரம் அந்த நோட்டீஸில் செய்யப்பட்டிருந்தது. விஷமும் பொய்யும் காமெடியும் துவேஷமும் கலந்திருந்தது அந்த பிரசுரத்தில்.

வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக தற்போதைய உறுப்பினர் திரு அப்துல் ரகுமானுக்கு போட்டியிட வாய்ப்பு அளித்ததை கண்டித்தும் விமர்சித்தும் அந்த பிரச்சாரம் அமைந்துள்ளது. வேலூர் தொகுதியை முஸ்லீம்களுக்கே தாரை வார்த்து விட்டதாக கருணாநிதியை திட்டி திமுககாரர்களை தூண்டி விட்டு எழுதப் பட்டுள்ள பிரசுரம் அது.

தேர்தலின் ஜனநாயக உள்ளடக்கம் பற்றிய புரிதல் கொஞ்சமும் இல்லாத ஆட்கள் சங் பரிவார கும்பல் என்பது இந்த நோட்டீசிலிருந்து நன்றாக தெரிகிறது.

ஒரு கூட்டணியில் யாருக்கு எந்த தொகுதியை ஒதுக்குவது என்பதோ இல்லை எந்த வேட்பாளரை நிறுத்துவது என்பதோ அந்த கூட்டணியின், கட்சியின் உரிமை. இந்த தொகுதியை ஏன் இந்த கட்சிக்கு நிறுத்தினாய், இவருக்கு ஏன் டிக்கெட் கொடுத்தாய் என்று அடுத்த கட்சியோ அடுத்த கூட்டணியோ கேட்க முடியாது. கேட்பதற்கான அருகதையும் கிடையாது.

ஒரு வாக்காளராக ஒரு வேட்பாளர் சரியில்லை என்று சொல்வதற்கு உரிமை உண்டு. அதுவும் கூட அந்த வேட்பாளரின் தகுதி, செயல்பாடு, நடத்தை, நடவடிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் அமைய வேண்டுமே தவிர, அந்த வேட்பாளரின் ஜாதி அல்லது மதத்தின் அடிப்படையில் அல்ல. ஆனால் வெறி பிடித்த இந்த மூடர் கூட்டத்திற்குத்தான்  இந்த நெறிமுறைகள் எதுவும் தெரியாதே! அதனால்தான் அவர்கள் வேலூர் தொகுதியை ஏன் முஸ்லீம்களுக்கே தாரைவார்க்கிறார்கள் என்று கூச்சலிட்டுள்ளனர்.

அப்துல் ரகுமானின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை, அவர் தொகுதிப் பக்கமே வரவில்லை, தொகுதிக்காக அவர் எதுவுமே செய்யவில்லை என்ற கடுமையான விமர்சனம் எனக்கும் உண்டு. மீண்டும் அவரை தேர்ந்தெடுப்பது என்பது வீண் என்பதுதன் என் கருத்து. திமுக கூட்டணிக்கு ஆதரவில்லை என்ற அரசியல் நிலைப்பாடும் இணைந்து கொள்கிறது. ஆனால் அப்துல்

இவர்கள் மறந்து போன, அல்லது ஏற்றுக் கொள்ள மறுக்கிற முக்கியமான ஒரு விஷயம் ஒன்று உண்டு. கட்சிகளால் வேட்பாளரை மட்டும்தான் நிறுத்த முடியும் ஆனால் தேர்ந்தெடுப்பது என்னமோ மக்கள்தான். அரசியல் கட்சிகளில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்கள் மதம், ஜாதி என்பதற்காக மாற்றுக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது இல்லை என்பதும் ஒரு யதார்த்தம்.

வேலூர் தொகுதிக்கே வருகிறேன்.

இவர்கள் அச்சிட்டுள்ள நோட்டீசை விஷயம் தெரியாத யாராவது பார்த்தால் வேலூர் தொகுதியில் இதுவரை முஸ்லீம்கள் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று தவறாக சிந்திக்கிற வாய்ப்பு இருக்கிறது. உண்மை நிலவரம் என்ன தெரியுமா?

இதுவரை வேலூர் தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.

எண்
வருடம்
வெற்றி பெற்றவர்
கட்சி
தோற்றவர்
கட்சி
1
1951
எம்.முத்துகிருஷ்ணன்
காங்கிரஸ்
தகவல் இல்லை

2
1957
எம்.முத்துகிருஷ்ணன்
காங்கிரஸ்
தகவல் இல்லை

3
1962
அப்துல் வாஹித்
காங்கிரஸ்
தகவல் இல்லை

4
1967
குசேலர்
திமுக்
தகவல் இல்லை

5
1971
ஆர்.பி.உலகநம்பி
திமுக்
தகவல் இல்லை

6
1977
வி.தண்டாயுதபாணி
என்.சி.ஓ
அப்துல் சமது
சுயே
7
1980
அப்துல் சமது
சுயே
தண்டாயுதபாணி
ஜனதா
8
1984
ஏ.சி.சண்முகம்
அதிமுக
அ.மா.ராமலிங்கம்
திமுக
9
1989
அப்துல் சமது
காங்கிரஸ்
அப்துல் லத்தீப்
திமுக
10
1991
அக்பர் பாஷா
காங்கிரஸ்
ப.சண்முகம்
திமுக
11
1996
ப.சண்முகம்
திமுக
அக்பர் பாஷா
காங்கிர
12
1998
என்.டி.சண்முகம்
பாமக
முகமது சகி
திமுக
13
1999
என்.டி.சண்முகம்
பாமக்
முகமது ஆசிப்
அதிமுக
14
2004
காதர் மொய்தீன்
திமுக
சந்தானம்
அதிமுக
15
2009
அப்துல் ரஹ்மான்
திமுக
எல்.கே.எம்.பி.வாசு
அதிமுக்

முஸ்லீம்களுக்கு எதிராக ஏதாவது எழுத வேண்டும் என்பதற்காக தோற்றுப் போன முகமது சகி, அப்துல் லத்தீப் ஆகியோரையெல்லாம் எம்.பி யாக்கி அழகு பார்த்திருக்கிறார்கள். வேலூர் தொகுதியில் இதுவரை அதிகபட்சமாக இந்துக்கள்தான் ஒன்பது முறை மக்களவை உறுப்பினர்களாக இருந்திருக்கிறார்கள். 1992 முதல் வேலூர் தொகுதியில் வசிக்கிற என்னால் கண்டிப்பாக சொல்ல முடியும் அக்பர் பாஷா, ப.சண்முகன், என்.டி.,சண்முகம், காதர் மொய்தீன், அப்துல் ரஹ்மான் என்று யாருமே உருப்படியாக எதுவும் செய்யவில்லை. முன்பு இருந்தவர்கள் யோக்கியதையும் (இப்போது பாஜக  அணி வேட்பாளராக போட்டியிடுகிற ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட யாரும் எதுவும் செய்ததில்லை என்றே மற்றவர்கள் சொல்கிறார்கள்)

இன்னொரு விஷயமும் இந்த பட்டியலைப் பார்த்தால் தெரியும். மூன்று முஸ்லீம் வேட்பாளர்களும் தோற்றுப் போயிருக்கிறார்கள். ஆக மக்கள் அப்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப வாக்களிக்கிறார்களே தவிர மதத்தைப் பார்த்து அல்ல என்பதும் தெளிவாகிறது. முஸ்லீம்கள் மட்டும் வாக்களித்திருந்தால் காதர் மொய்தீனோ அப்துல் ரஹ்மானோ வெற்றி பெற்றிருக்க முடியுமா? அல்லது இந்துக்கள் அத்தனை பேரும் ஏன் பையூர் சந்தானத்திற்கோ அல்லது எல்.கே.எம்.பி.வாசுவிற்கோ ஒட்டு போட்டு வெற்றி பெற வைக்கவில்லை.

இந்த பிரசுரத்தில் அபாயகரமான ஒரு செய்தியும் காமெடியான ஒரு செய்தியும் உள்ளது. அவை இரண்டுமே தனி பதிவாக எழுத வேண்டியது. அதை முடிந்தால் இன்றோ இல்லை நாளையோ பார்ப்போம். 

இந்து சிப்பாய்களும் முஸ்லீம் சிப்பாய்களும் கரம் கோர்த்து அடிமைத்தனத்திற்கு எதிராக ஒன்றிணைந்து போராடி வீர மரணம் அடைந்து ஒற்றுமையின் தளமாக திகழும் வேலூர் மண்ணில் இப்படிப்பட்ட விஷப் பிரச்சாரத்தை இம்மண்ணின் மக்கள் நிச்சயம் முறியடிப்பார்கள். முட்டை மடிக்க இந்த நோட்டீஸ் வந்ததே அந்த உணர்வின் வெளிப்பாடுதான்.

தங்களின் சாதனையாக எதுவும் சொல்ல முடியாமல் பொய் மட்டுமே சொல்லித் திரிகிற பாஜக இப்படி மத உணர்வை தூண்டி விட்டாவது ஆதாயம் அடைய முடியுமா என்று பார்க்கிறது. இந்திய வாக்காளர்கள் இவர்களின் போதையேற்றும் முயற்சிகளுக்கு அடி பணிய மாட்டார்கள்.

No comments:

Post a Comment