Wednesday, April 9, 2014

தேர்தல் - பத்து கோடியில் தொடங்கி ஆயிரம் கோடிக்கு மேல் ?????



ஆரம்ப காலத்தில் தேர்தல் நடத்துவதற்கான செலவினம் என்பது குறைவான தொகையாக இருந்துள்ளது. பத்து கோடி ரூபாயாக இருந்த
செலவினம் ஆயிரம் கோடி ரூபாயையும் கடந்துள்ளது.

எண்
தேர்தல் ஆண்டு
         செலவுத் தொகை     
1
1952
10,45,00,000
2
1957
5,90,00,000
3
1962
7,32,00,000
4
1967
10,79,69,000
5
1971
11,60,87,450
6
1977
23,03,68,000
7
1980
54,77,39,000
8
1984
81,51,34,000
9
1989
154,22,00,000
10
1991
359,10,24,679
11
1996
597,34,41,000
12
1998
666,22,16,000
13
1999
947,68,31,000
14
2004
1,113,87,89,165
15
2009
8,46,66,89,762

இந்த பட்டியல் தேர்தல் நடத்த அரசு செய்த செலவு மட்டுமே. கட்சிகள் செய்த செலவுகள் இதில் இடம் பெறவில்லை.

இரண்டாயிரத்து நான்காம் வருடத்தை விட இரண்டாயிரத்து ஒன்பதாவது வருடம் செலவினம் குறைந்துள்ளதா என்று வியக்க வேண்டாம். இன்னும் பதிமூன்று மாநிலங்களின் தேர்தல் செலவு தணிக்கை முழுமையாக முடியாததால் முழுமையான விபரத்தை அரசு அளிக்கவில்லை. எப்படியும் ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாயாவது தாண்டியிருக்கும்.

அப்படியென்றால் இத்தேர்தலுக்கு எவ்வளவு செலவாகலாம்?
இரண்டாயிரம் கோடி ரூபாய் கூட ஆகலாம்.

வாக்காளர்கள் அதிகமானதை விட விலைவாசி அதிகமாக உயர்ந்ததுதான் செலவு அதிகரிக்க ஒரு முக்கியக் காரணம். இவ்வளவு பெருஞ்ச்செலவில் நடத்தப்படும் தேர்தல் என்பதற்காகவாவது, மக்கள் முழுமையாக வாக்களிக்க வேண்டும்

அதே போல தேர்ந்தெடுக்கப் படுகிற உறுப்பினர்கள் முழுமையாக மக்களவை தொடர்களிலும் கலந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment