அமெரிக்க
தேர்தல் நேரத்தில் பழி வாங்குவோம் என்று பாரக் ஒபாமா சொன்னாரே, அப்படியானால் அமித்
ஷா சொன்னதில் என்ன தவறு என்று பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி கேட்டுள்ளார்.
முசாபர்நகர்
கலவரம் நடந்த பூமி. கலவரத்தில் பாதிக்கப்பட்ட
ஆயிரக்கணக்கான மக்களால் இன்னும் சொந்த வீட்டிற்கு செல்ல முடியாமல் அகதிகள்
முகாமில் தங்கியிருக்கும் அவலம் தொடர்கிறது. அகதிகள் முகாமில் உள்ளவர்கள்
வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது என்று ஏற்கனவே பாஜக வேட்பாளர் ஹுக்கும் சிங்
மிரட்டியுள்ளார்.
அப்படி உள்ள
போது முசாபர்நகர் கலவரங்களின் சூத்ரதாரி, அங்கே ஜாட் இன மக்களுக்கும்
முஸ்லீம்களுக்கும் பகைமைத்தீயை மூட்டி விட்டவர், குஜராத் கலவர ரத்தத்தை சந்தனம்
போல மேலே பூசியிருக்கிற அமித் ஷா பழி வாங்க வேண்டும் என்று பேசினால் அதற்கு என்ன
பொருள்?
மீண்டும்
அங்கே ஒரு கலவரத்தை நடத்துவதற்கு அமித் ஷா அச்சாரம் போட்டிருக்கிறார்.
ஒபாமா
பேசும்போது நாங்கள் பேசக் கூடாதா என்று கேட்பது அபத்தத்தின் உச்சக்கட்டம், அப்படி
ஒபாமா போல பேச வேண்டுமென்றால் பேசாமல் நீங்களும் அமெரிக்காவிற்கு போய் அங்கே
தேர்தலில் நிற்க வேண்டியதுதானே.
அவர் மீது
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது.
No comments:
Post a Comment