இன்று காலை
வீட்டிற்கு வெளியே திடீரென பெரும் கூச்சல். சாலையில் நடந்து கொண்டிருந்த ஒரு
பெண்மணியை தெரு நாய் துரத்தி கடித்து விட்டது.
இது எங்கள்
பகுதியில் நாங்கள் அன்றாடம் சந்திக்கும் ஒரு பிரச்சினை. மேனகா காந்தி அமைச்சராக
இருக்கும் போது தெரு நாய்களை கொல்லக் கூடாது, அவைகளுக்கு கருத்தடை செய்து விட
வேண்டும் என்று சட்டம் போட்டு விட்டார்.
அடிப்படை
பராமரிப்புப் பணிகளுக்கே பணம் இல்லாத உள்ளாட்சி அமைப்புக்களால் எப்படி நாய்களுக்கு
கருத்தடை செய்ய முடியும். அதனுடைய விளைவாக தெரு நாய்களின் பெருக்கம் அதிகரித்து
விட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரும் சுதந்திரமாக நடந்து போக முடியாத
நிலை ஏற்பட்டு விட்டது.
வீடு திரும்ப
இரவு பதினோரு மணி ஆகலாம் என்பது முன்பே தெரிந்தால் நானெல்லாம் காலையில் புறப்படும்
போதே இரு சக்கர வாகனத்தை எடுத்துச் செல்வதில்லை. யார் நாய்க்கடி வாங்குவது.
ஆட்ட்டோவில் வந்தாலும் அதனையும் நாய்கள் துரத்தும்.
பிராணிகள்
மீது மேனகா காந்தி வைத்திருக்கும் பிரியம் பாராட்டத் தக்கது. ஆனால் மனிதர்களின்
பிரச்சினைகளையும் அவர் கவனிக்க வேண்டும். குளிர்சாதனம் செய்யப்பட்ட கார்களில் வழ
வழ சாலைகளில் செல்லும் அவர் போன்றவர்களுக்கு அது புரியாது.
ஒரே ஒரு நாள்
இரவு பதீனோரு மணிக்கு மேனகா காந்தியை வேலூர் சத்துவாச்சாரி தெருக்களில் நடக்கச்
சொல்லுங்கள். அப்போதுதான் அவர் போட்ட சட்டத்தால் மனிதர்கள் எவ்வளவு அவஸ்தைப்
படுகின்றனர் என்பது அவருக்கு புரியும்.
இப்பிரச்சினை
இந்தியா முழுதுமுள்ள ஒரு பிரச்சினையும் கூட.
No comments:
Post a Comment