Thursday, April 17, 2014

முஸ்லீம்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் வெட்கம் கெட்ட மோடியின் கட்சி

தாமதமாய் அளிக்கப்பட்ட பாஜகவின் தேர்தல் அறிக்கையில் 
சொல்லப்பட்டுள்ள இரண்டு விஷயங்கள்.

"சுதந்திரம் பெற்று பல வருடங்களான பின்பும் பெரும்பாலான
முஸ்லீம்கள் ஏழ்மை நிலையில் வாடுவது வருத்தத்திற்கு உரியது.
அவர்கள் முன்னேற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கல்வித்தரத்தை முன்னேற்ற மதரஸாக்கள் நவீனமயமாக்கப்படும். "

இதை, இதைத்தான சச்சார் கமிட்டியும் ரங்கநாத் மிஷ்ரா கமிட்டியும்
சொன்னது? அந்த கமிட்டி சொன்னது சரியில்ல, எந்த பரிந்துரையையும்
அமலாக்கக் கூடாது என்று குறுக்க நின்னு தடுத்தது யாரு?

அப்போ இந்த மாதிரி முட்டுக்கட்டை போட்டுட்டு இப்போ தேர்தல்
அறிக்கையில் இப்படி எழுதியிருக்காங்க என்றால் 
பாஜகவை விட  மோசடிப் பேர்வழிங்க யாராவது இருக்க முடியுமா?

வெட்கம் கெட்ட ஜென்மங்கள்.

4 comments:

  1. ஐயா, வெட்கமுள்ள நண்பரே,

    ஒரு மதக் கட்சியின் தலைவர் ஓட்டின் பெயரால் அம்மையாரை மிரட்டிப் பணிய வைப்பதுபற்றி ஒரு இடதுசாரிக் கட்சித் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் கூறியதாக இன்று செய்தி வந்துள்ளது. இதுபற்றிக் கருத்தையேதான். நான் முன்பு வெளியிட்டிருந்தேன். அப்போ அவரும் இந்து மதவாதியா.

    கம்யூனிஸ்டுகளின் பாணியில் எனது காமெடி : நான் இந்துவாக இந்தியாவில் பேசாமல் பாகிஸ்தானிலா பேசமுடியும்.

    கோபாலன்

    ReplyDelete
  2. கோபாலன், நீங்க எழுதியிருக்கிறது ஒன்னுமே புரியலியே, எதையும் புரிந்து கொண்டு எழுதுவது போலவும் தெரியலியே.

    நீங்க எப்பவுமே இப்படித்தானா?

    ReplyDelete
  3. இன்றைய செய்தித்தாளைப் படியுங்கள். தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் மதுரையில் கூறியது :

    //All these days, she never criticised the BJP or its prime ministerial candidate Narendra Modi. She now targets the BJP because she has realised that she will not get minority notes//

    ஏன் இடதுசாரிக் கட்சித்தலைவர்கள் உயர்சாதியினராக மட்டும் இருக்கிறார்கள் என்றுகூட ஒருவர் தனது பதிவில் எழுதியிருந்த்தார்.

    எதாவது புரிகிறதா தலைவா. மதச் சார்பற்றவர்களுக்கு உள்ள வெயிலின் வேதனை ந்ன்றாகவே புரிகிறது.

    கோபாலன்

    ReplyDelete
  4. எனது கருத்துக்கள் தங்களை ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளியிருக்கலாம். தாங்கள் சார்ந்திருக்கும் ஹீரோ ஒர்ஷிப் இல்லாத கட்சியைப்? பெரிதும் மதித்தவன் இன்று உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.

    நன்றி,

    கோபாலன்

    ReplyDelete