Monday, April 7, 2014

பாஜக தேர்தல் அறிக்கை - தாயின் தாலி எப்போது அறுபடும் என்று கேட்ட குழந்தையின் கதைதான்

வெகு நாட்களாக மகன் வாய் பிறந்து பேசவில்லை என்ற கவலை
அந்த பெற்றோருக்கு. ஒரு புறம் பார்க்காத மருத்துவர்கள் இல்லை,
இன்னொரு புறம் போகாத கோயில்கள் இல்லை. பல வருடங்கள்
கழித்து அந்த குழந்தை ஒரு வழியாக பேசியது. 

அது பேசிய முதல் பேச்சு

"அம்மா, அத்தை போல நீ எப்போது தாலி அறுப்பாய்?'

அந்த கதை போலவே  தேர்தல் நடைமுறைகள் தொடங்கி பல
நாட்கள் ஆனாலும் முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கிய
இன்று சாவகாசமாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக்.

அதைப் படித்துப் பார்த்தால் அம்மாவின் தாலியறுக்கச் சொன்ன
கதையாகவே இருக்கிறது.

இதைச் செய்வோம், அதைச் செய்வோம் என்று ஏராளமாக
சொன்னாலும் அதை எப்படிச் செய்வோம், அதற்கு எப்படி
பணம் வரும் என்று சொல்லவில்லை.

ஆனால் பாம்பின் நச்சுத்தன்மை மாறாது என்பதன் சான்றாக
அயோத்தியில் கோயில் கட்டுவோம்
காஷ்மீரின் சட்டப் பிரிவு 370 ஐ நீக்குவோம்
பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம்
பசு வதை என்று தனது மத வெறி அஜெண்டாவை 
பாஜக தேர்தல் அறிக்கையில் கொண்டு வந்து விட்டது.

அதே போல சில்லறை வணிகம் தவிர மற்ற அனைத்திலும்
அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்போம் என்று சொல்லி
பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு நடைபாவாடை விரித்துள்ளது.

நாளை வால்மார்ட்டுக்கும் ரத்தினக் கம்பளம் விரிக்கவும்
தயங்காது என்பதன் முன்னோட்டமும் கூட இது.

பாஜக விற்கு ஏன் வாக்களிக்கக் கூடாது என்பதற்கான நியாயமாக்
அதன் தேர்தல் அறிக்கை மட்டுமே போதும்
 

2 comments:

  1. இவ்வளவு சொல்லும் நீங்கள், வெஸ்ட் பெங்காலில் மின் பகிர்வு 1990 களிலேயே தனியார் மயமாக்கப் பட்டது ஏன் என்றோ.. பியர்லெஸ் இன்சுரன்ஸ் நிறுவனத்தில் தோழர்கள் பங்கு பற்றியோ ஏன் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள்? நேர்மை என்பது எல்லா விஷயத்திலும் இருக்க வேண்டும் அல்லவா?

    ReplyDelete
  2. அன்பே சிவம்April 7, 2014 at 8:42 PM

    உரக்க சொல்ல விரும்புகிறேன்... நீர்..,
    ஒரு உதாரண புருஷர்.
    ஆயினும் என் கவலையெல்லாம்.., இதைப்பற்றி
    உணர வேண்டியவர்கள்., உணர மறுக்கின்றனர்.
    உறையில் இருக்கும் வாளால் காய்கறியை கூட வெட்ட முடியாது..,
    என்பதையும் அறியாதவர்கள் அல்ல அவர்கள்..,

    ReplyDelete