அண்ணல்
அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளின் போது வேலூர் நகரில் உள்ள
தொழிற்சங்கங்கள் சார்பிலும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பிலும் வேலூர்
மக்கானில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிப்போம். வழக்கமாக தலித் அமைப்புக்கள்,
சில எஸ்.சி/எஸ்.டி ஊழியர் நலச் சங்கங்கள் தவிர வேறு யாரையும் பார்க்க முடியாது.
2011 ம் ஆண்டு அவரது பிறந்த நாள்
போது வித்தியாசமான காட்சியை பார்க்க முடிந்தது. திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ்
போன்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அன்று திரண்டிருந்தார்கள். அதுவே அந்த ஆண்டு
டிசம்பர் 6 நினைவு
நாளன்று இக்கட்சிகள் எதையும் காணவில்லை. அதே போல் 2012, 2013 ஆகிய இரண்டு
வருடங்களிலும் இதே நிலைதான்.
இதோ இன்று
காலை நாங்கள் செல்லும் போது காட்சி மீண்டும் மாறி இருந்தது. திமுக, அதிமுக மற்றும்
காங்கிரஸ்காரர்களின் கூட்டம் கூடியிருந்தது.
மக்களவைத்
தேர்தலினால் அவர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் நினைவில் வந்து விட்டார். இனிமேல்
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் சமயத்தில் மீண்டும் வந்தால் போதும்.
ஆனால் தேர்தல்
சமயத்தில் கூட அண்ணல் அம்பேத்கருக்கு மரியாதை செய்யக் கூடாது என்ற கொள்கை
உறுதியோடு பாஜக. பாமக கட்சிகள் இருப்பது பாராட்டத்தக்கது. கூட்டணி காரணமாக மதிமுக
இந்தாண்டு அடக்கி வாசித்து விட்டது போலும். இது வேலூரின் நிலவரம்.
மற்ற
இடங்களில் எப்படியோ?
No comments:
Post a Comment