Wednesday, April 16, 2014

காவிக் கூட்டத்திற்கு எதிராக கலைஞர்களின் அறச் சீற்றம்



கீழே உள்ள செய்தி தமிழக அரசியல், கலை, பண்பாட்டு வரலாற்றில் மிக முக்கியமானது. பல்வேறு அரசியல் கருத்தோட்டங்கள் உள்ளவர்களாக இருந்தபோதிலும் தங்களுக்குள் இடையறாது விவாதித்துக்கொண்டும் ஏன் மோதிக் கொண்டும் இருப்பவர்களாக இருந்தாலும் இந்த தேசத்தின் மீதான உண்மையான அக்கறையோடு அனைவரும் ஓரணியாக திரண்டு ஒற்றுமையாய் விடுத்துள்ள வேண்டுகோள் இது.

படைப்பாளிக்கு சுவாசம் போன்றது சுதந்திரம். அது காவிப்படையின் சூலத்தால் பறி போவதை அனுமதிக்க மாட்டோம் என்று எழுந்துள்ள ஒவ்வொரு படைப்பாளியையும் வாழ்த்துகிறேன். வணங்குகிறேன்.

தேசத்தின் மீது உண்மையான அக்கறையுள்ள கலைஞர்கள் இவர்களோடு இணைவார்கள். எழுத்து வியாபாரிகளாக தங்களை அடையாளப் படுத்திக்கொண்டு பரிவாரக் கும்பலோடு இணைந்து நிற்பவர்களையும் கள்ள மவுனம் சாதிப்பவர்களையும் தமிழக வாசிப்பாளர்கள் புறக்கணிப்பார்கள்.

பாஜக கூட்டணியை நிராகரிப்பீர் – 224  கலைஞர்கள், எழுத்தாளர்கள் தமிழக மக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள்

15.04.2014  மாலை 3 மணி அளவில் சென்னை சேப்பாக்கம் ப்ரெஸ் க்ளப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை. தமிழக வரலாற்றில் 224 கலைஞர்கள், எழுத்தாளர்கள் ஒன்று கூடி இப்படி ஒரே குரலில் ஒரு வேண்டுகோளை தமிழ் மக்கள் மத்தியில் ஒலித்தது சமீப காலங்களில் இதுவே முதல் முறை}
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சென்னை, 16-04 - 2014

இந்து அரசு ஒன்றை அமைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் ஒரு இயக்கத்தின் முன்னணி அமைப்பாக உள்ள ஒரு கட்சி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு, இந்திய வரலாற்றில் வேறெப்போதும் இல்லாத அளவிற்குத் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. 2002ல் குஜராத்தில் முஸ்லிம்களைக் கொன்று குவித்த கொடுஞ் செயலுக்குத் தலைமை தாங்கியது மட்டுமின்றி, அதற்காக இதுவரை வருத்தம் தெரிவிக்காத நரேந்திர மோடிதான் இந்த முயற்சியிலும் தலைமை ஏற்றுள்ளார். இந்த நாட்டில் மிகவும் சக்தி வாய்ந்த கார்ப்பொரேட் நிறுவனங்கள் இதற்குப் பின்புலமாக உள்ளன. கார்போரேட் மூலதனமும் வகுப்புவாத சக்திகளும் அமைத்துள்ள இந்தக் கூட்டணி, நமது மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

இந்த ஆபத்தை எதிர்த்து இன்று இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலுமுள்ள எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், இதழாளர்கள் மற்றும் கலைஞர்கள் களம் இறங்கியுள்ளனர், அவர்களின் குரலுடன் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களாகிய நாங்களும் இணைந்து கொள்கிறோம்.

தமிழகத்தைப் பொறுத்த மட்டில் ஆதிக்க சாதிகளின் கூட்டணியை உருவாக்கிச் செயல்படும் ஒரு கட்சியும் இக் கூட்டணியில் இணைந்திருப்பது இந்த ஆபத்தை இரட்டிப்பாக்குகிறது. மதச் சார்பின்மையை முன் வைத்து உருவான திராவிட இயக்கத்தின் பெயரைத் தாங்கி நிற்கும் இரு கட்சிகள் மோடியை முன் நிறுத்துவதில் துணை போகின்றன.

இந்த ஆபத்து குறித்துத் தீவிரமாகச் சிந்தித்து, இதைத் தடுப்பதற்கான எல்லவிதமான செயற்பாடுகளையும் மேற்கொண்டு, நமது மதச் சார்பற்ற ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டுமென பொறுப்புள்ள குடிமக்களையும், அமைப்புக்களையும் நாங்கள் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். பா..கவால் தலைமை தாங்கப்படும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக வாக்களித்து, ஆட்சியைக் கைப்பற்ற முனையும் இந்தக் கார்பொரேட் - மதவாத - சாதிய சக்திகளின் முயற்சியை வீழ்த்துமாறு தமிழக வாக்காளர்களைக் கேட்டுக் கொள்கிறோம். மதச் சார்பர்ற, ஜனநாயக சக்திகளை ஆதரித்து வாக்களிக்க வேண்டுகிறோம்.

“Never before in post-independence India have witnessed political forces, which are a front for an organisation committed to create a Hindu Rashtra, strong bid for power in the coming elections. These forces are led by a person who presided over a pogrom against Muslims in Gujarat in 2002 and has never accepted his role in that ghastly incident. And they continue to get support and the backing from the most powerful corporate houses in the country. The prospect of this alliance of corporate capital and communal forces coming to power constitutes a palpable threat to the future of our secular democracy.

"Writers, artists and intellectuals all over India are deeply concerned with this danger and are appealing to the electorate to take note of this danger. We, the Tamil writers and artists are also joining our hands with them.

" We are more concerned about the situation in Tamilnadu as the casteist forces have joined hands with these communalist forces. Two other parties which claim the secular legacy of the Dravidian parties are also in that coalition.

“We urge all responsible individuals and political formations to ponder over the situation and urgently take necessary steps to defend our secular democracy. We appeal to the electorate to foil this corporate-communal alliance’s bid for power by voting against the BJP-led NDA."

கையெழுத்திட்டுள்ள எழுத்தாளர்கள், கலைஞர்கள்

கி.இராஜநாராயணன், மூத்த எழுத்தாளர், புதுவை, பிரபஞ்சன், சாகித்ய அகாதமி பரிசு பெற்ற எழுத்தாளர், சென்னை, இந்திரா பார்த்தசாரதி, மூத்த தமிழ் எழுத்தாளர். டெல்லி, முனைவர் தொ.பரமசிவன், எழுத்தாளர்/ வரலாற்றறிஞர், திருநெல்வேலி, கவிக்கோ அப்துல் ரஹ்மான், மூத்த தமிழ்க் கவிஞர், சென்னை, விஜய்சங்கர், ஆசிரியர், ஃப்ரன்ட்லைன், சென்னை, வெங்கடேஷ் சக்கரவர்த்தி, திரைக் கோட்பாட்டாளர், ஹைதராபாத். கலாப்ரியா, மூத்த கவிஞர், திருநெல்வேலி, அப்பண்ணசாமி, எழுத்தாளர்/இதழாளர், சென்னை, வெளி ரங்கராஜன், எழுத்தாளர்/இதழாசிரியர், சென்னை, .தமிழ்ச்செல்வன், எழுத்தாளர், த. மு..., பத்தமடை, எஸ்.வி.இராஜதுரை, மூத்த எழுத்தாளர், கரூர், மருத்துவர் ருத்ரன், எழுத்தாளர், சென்னை, எஸ்,ராமகிருஷ்ணன், எழுத்தாளர், சென்னை, வஹீதையா கான்ஸ்டான்டின், எழுத்தாளர், நாகர்கோவில், அம்பை, எழுத்தாளர், டெல்லி, வண்ணதாசன் (கல்யாண்ஜி), எழுத்தாளர், திருநெல்வேலி, .கீதா, எழுத்தாளர், சென்னை, கோணங்கி, எழுத்தாளர், கோவில்பட்டி,

முனைவர் ஆனந்தி, பேராசிரியர், சென்னை, .மார்க்ஸ், எழுத்தாளர், சென்னை, சந்திரா, எழுத்தாளர், சென்னை, கவின்மலர், எழுத்தாளர், சென்னை, கோ.சுகுமாரன், மனித உரிமைப் போராளி/எழுத்தாளர், புதுவை, ராமானுஜம், எழுத்தாளர்/ மொழிபெயர்ப்பாளர், சென்னை, தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞர், சென்னை, யூமா வாசுகி, எழுத்தாளர், சென்னை, முனைவர் சாதிக், கவிஞர்/முன்னாள் துணைவேந்தர், சென்னை, ஞாநி, எழுத்தாளர்/இதழாளர், சென்னை, துரைராஜ், மூத்த இதழாளர், திருச்சி, வாசுதேவன், எழுத்தாளர்/விமர்சகர், சென்னை, முனைவர் ராஜன் குறை, எழுத்தாளர், டெல்லி, யமுனா ராஜேந்திரன், எழுத்தாளர், லண்டன், ஓவியர் விஸ்வம், சென்னை, ஓவியர் நடேஷ், சென்னை, பா.ரஞ்சித், திரைப்பட இயக்குனர், சென்னை, அமீர், திரைப்பட இயக்குனர், சென்னை, வெற்றிமாறன், தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனர், சென்னை,பொ.வேல்சாமி, எழுத்தாளர்/தமிழறிஞர், நாமக்கல், வி.எம்.எஸ்.சுபகுணராஜன், எழுத்தாளர், திரை இதழாசிரியர், சென்னை, சு.வெங்கடேசன், சாகித்ய அகாதமி பரிசு பெற்ற தமிழ் எழுத்தளர், மதுரை, பாரதி தம்பி, எழுத்தாளர்/இதழாளர், சென்னை,

கிராமியன், எழுத்தாளர்/விமர்சகர், திருச்சி, ஷோபாசக்தி, எழுத்தாளர், பாரிஸ், முகம்மது சிப்லி, இதழாளர், சென்னை, அஜயன் பாலா. எழுத்தாளர், சென்னை, அசதா, எழுத்தாளர், விழுப்புரம், முனைவர் வீ.அரசு, எழுத்தாளர்/பேராசிரியர், சென்னை, பாஸ்கர் சக்தி, எழுத்தாளர், சென்னை, முருகேச பாண்டியன், எழுத்தாளர்/விமர்சகர், மதுரை, முருக பூபதி, அரங்க இயக்குனர், கோவில்பட்டி, பிரளயன், அரங்க இயக்குநர், சென்னை, சுபா தேசிகன், இதழாளர்/எழுத்தாளர், சென்னை, சி.மோகன், எழுத்தாளர்/சிறு பத்திரிக்கை எழுத்தாளர், சென்னை, தளவாய் சுந்தரம், எழுத்தாளர், சென்னை, சங்கர ராம சுப்பிரமணியன், எழுத்தாளர்/ இதழாளர், சென்னை, மீனா, எழுத்தாளர், திருவண்ணாமலை, பிருந்தா, எழுத்தாளர், சென்னை, நேசமித்திரன், கவிஞர்/இதழாசிரியர், நைஜீரியா, .கோபால கிருஷ்ணன், இதழாளர், சென்னை,

ஜெயராணி, எழுத்தாளர்/இதழாளர், சென்னை, தீஸ்மாஸ் டீ சில்வா, எழுத்தாளர்/இதழாளர், சென்னை, லஷ்மி சரவண குமார், எழுத்தாளர், சென்னை, சிபி செல்வன் எழுத்தாளர், சேலம், அழகிய பெரியவன் எழுத்தாளர், வேலூர், தேவிபாரதி, எழுத்தாளர், சென்னை, கவிதா சொர்ணவல்லி, எழுத்தாளர்/இதழாளர், சென்னை, மனுஷ்யபுத்திரன், கவிஞர்,சென்னை, சுசீந்திரன் நடராசா, எழுத்தாளர், பெர்லின். .மெஹபூப் பாஷா, மனித உரிமைச் செய்தி இதழாசிரியர், மதுரை, ரியாஸ் குரானா, எழுத்தாளர்/விமர்சகர், இலங்கை, ஆர்.பி.அமுதன், திரைப்பட இயக்குநர், சென்னை, பிரகதீஸ்வரன், நாடகக் கலைஞர்/பதிப்பாளர், புதுகை, சுகுணா திவாகர், எழுத்தாளர்/கவிஞர், சென்னை, விஷ்ணுபுரம் சரவணன், கவிஞர், சென்னை, நீலகண்டன், பதிப்பாளர், சென்னை. பா..மகிழ்நன், ஊடகவியலாளர், சென்னை,

இரா.தெ.முத்து, எழுத்தாளர், சென்னை, ,கு,ராஜன், நூலாசிரியர், சென்னை, அருள் எழிலன், எழுத்தாளர், சென்னை, ஜீவ சுந்தரி, எழுத்தாளர், ன்னை,அபு சாலிஹ், இதழாசிரியர். சென்னை, ஷாஜஹான், எழுத்தாளர், டெல்லி, ஆர்.ஆர்.சீனிவாசன், ஆவணப்பட இயக்குநர், சென்னை, தி.கண்ணன், எழுத்தாளர், ஶ்ரீரங்கம், வினி சர்ப்பனா, இதழாளர், சென்னை, புதுஎழுத்து மனோன்மணி, இதழாசிரியர், வேரிப்பட்டிணம், ஜமாலன், எழுத்தாளர்/விமர்சகர், ஷார்ஜா, கமலக்கண்ணன், திரைப்பட இயக்குனர், கோவை, ஆத்மார்த்தி, கவிஞர், மதுரை, ஆதவன் தீஷண்யா, எழுத்தாளர்/இதழாசிரியர், ஓசூர், தேனுகா, ஓவிய விமர்சகர், கும்பகோணம், பேரா. பா.கல்விமணி, கல்வியாளர், திண்டிவனம், பேரா. .சிவகுமார், கல்வியாளர், சென்னை, பேரா. மு.திருமாவளவன், கல்வியாளர், சென்னை, ஜாபர் சாதில் பாகவி, இதழாசிரியர், சென்னை,ரஜினி, மனித உரிமைப் போராளி, மதுரை, குட்டி ரேவதி, கவிஞர், சென்னை,அருண், திரைப்பட இயக்கம், சென்னை, இளங்கோ கிருஷ்ணன், கவிஞர், சுதிர் செந்தில், இதழாசிரியர், திருச்சி, ஐயப்ப மாதவன், கவிஞர், சென்னை,

தாமிரா திரைப்பட இயக்குனர், .கீரா திரைப்பட இயக்குனர் நக்கீரன், கவிஞர், நன்னிலம், லிபி ஆரண்யா, கவிஞர், மதுரை, குமார செல்வா, எழுத்தாளர், மார்த்தாண்டம், ஜே.ஆர்.வி.எட்வர்ட், எழுத்தாளர், நாகர்கோவில், இசை, கவிஞர், கோவை மகுடேஸ்வரன், கவிஞர், திருப்பூர், மேகவண்ணன், எழுத்தாளர், இராமேஸ்வரம்,றஞ்சி, எழுத்தாளர், ஸ்விட்சர்லாந்த், அன்புச் செல்வன், கவிஞர், மதுரை,பவுத்த அய்யனார், எழுத்தாளர்/பதிப்பாளர், சென்னை, முத்துமீனாள், எழுத்தாளர், சென்னை, யாழன் ஆதி, கவிஞர், ஆம்பூர்,தை.கந்தசாமி, கவிஞர், திருத்துறைபூண்டி,முனைவர் ரவிச்சந்திரன் ஶ்ரீராமச்சந்திரன், எழுத்தாளர், கோவை,நிஷா மன்சூர், கவிஞர், மேட்டுப்பாளையம்,அருண், திரைப்பட இயக்கம், சென்னை,சே.கோச்சடை, எழுத்தாளர்/மொழிபெயர்ப்பாளர், காரைக்குடி,முனைவர் ஜீவரத்தினம், ஆய்வாளர், ரெட்டைவயல், சி.சரவண கார்த்திகேயன், எழுத்தாளர், பெங்களூரு,போஸ் பிரபு (பிரேமா), கவிஞர், சிவகாசி, யுவ கிருஷ்ணா, பத்திரிகையாளர், மடிப்பாக்கம், லீனா மணிமேகலை, கவிஞர், சென்னை,

சா.விஜயலக்ஷ்மி, கவிஞர், சென்னை, நந்தகுமார், எழுத்தாளர், கடார், பா.ரவீந்திரன், எழுத்தாளர், ஸ்விட்சர்லாந்த், தளவாய், எழுத்தாளர்/இதழாளர், சென்னை, பூ.இராமு, திரைக் கலைஞர், சென்னை, கருப்பு கருணா, குறும்பட இயக்குநர், திருவண்ணாமலை, சிவக்குமார், திரை ஆய்வு எழுத்தாளர், சென்னை, உமர் ஃபாரூக், எழுத்தாளர், கம்பம், தமிழ்நதி, கவிஞர், கனடா, சுகன் கனகசபை, கவிஞர், பாரிஸ், .வெற்றிவேல், எழுத்தாளர், சவூதி அரேபியா, கார்டூனிஸ்ட் பாலா, சென்னை, அதிஷா, இதழாளர், சென்னை, வெய்யில், கவிஞர், காரைக்கால், நடராஜன் கிருஷ்ணன், எழுத்தாளர், குன்றத்தூர், நந்தகோபால், இதழ் ஆசிரியர், சென்னை, எஸ்.காமராஜ், எழுத்தாளர், சாத்தூர், ஜபருல்லா ரஹ்மானி, எழுத்தாளர், சிங்கப்பூர், நீரை மகேந்திரன், இதழாளர், சென்னை, கவுதம சக்திவேல், மனித உரிமைப் போராளி, பொள்ளாச்சி, நரன், கவிஞர், சென்னை,

கவிதா முரளீதரன், இதழாளர், சென்னை, முனைவர் பெருந்தேவி, எழுத்தாளர், நியூயார்க், விஷ்ணுராம், ஊடகவியலாளர், சென்னை, ராஜவேலு, லேபர் நியூஸ் நிர்வாகி, சென்னை, சிவகுமார், எழுத்தாளர்/பேராசிரியர், சென்னை, மாரிச்செல்வன், எழுத்தாளர், சென்னை,முகம்மது ஆசிக், கவிஞர், வல்லம், இரா.ஜவஹர், மூத்த இதழாளர், சென்னை, டி.அஜீஸ் லுத்ஃபுல்லாஹ், எழுத்தாளர்/மொழிபெயர்ப்பாளர், சென்னை, ஃபைஸ் ஃபைசல், இதழாசிரியர், சென்னை, மு.சிவகுருநாதன், எழுத்தாளர், திருவாரூர், டாக்டர் ஹிமானா சையத், எழுத்தாளர், சென்னை, பாரதிநாதன், நாவலாசிரியர், சென்னை, இரா,வினோத், ஊடகவியலாளர், பெங்களூரு, இளவேனில், கவிஞர், பள்ளிப்பட்டி, சக்தி ஜோதி, கவிஞர், மதுரை, எஸ்.ஷங்கர். இதழாளர், மடிப்பாக்கம், ஶ்ரீ குமார், விமர்சகர், சென்னை, கார்த்திகைப் பாண்டியன், எழுத்தாளர், மதுரை. தேவரசிகன், கவிஞர், கும்பகோணம், ஜி.சரவணன், எழுத்தாளர், அம்மாசத்திரம், சிராஜுதீன், பதிப்பாளர், சென்னை, பிரேமா ரேவதி, எழுத்தாளர், சென்னை, கு., விமர்சகர், மதுரை, ஜி.ஶ்ரீதரன், எழுத்தாளர், ஓசூர், அத்தாவுல்லா, எழுத்தாளர், நாகர்கோவில், ஆளூர் ஷாநவாஸ், எழுத்தாளர், சென்னை, ஆர்,முருகப்பன், நூலாசிரியர், திண்டிவனம், மா..மதிவாணன், ஊடகத்துறை, சென்னை, சாம்ராஜ், கவிஞர், மதுரை, யவனிகா ஸ்ரீராம், கவிஞர், திண்டுக்கல், செல்மா பிரியதர்ஷன், கவிஞர், திண்டுக்கல், .கரீம், எழுத்தாளர், கோவை, அறிவழகன், எழுத்தாளர், சேலம், .மதிவண்ணன், கவிஞர், பெருந்துறை, குமார் அம்பாயிரம், எழுத்தாளர், திருவண்ணாமலை, பிரியாபாபு, எழுத்தாளர், சென்னை,

முனைவர் தி.பரமேஸ்வரி, கவிஞர்/பதிப்பாசிரியர், காஞ்சீபுரம், பவா செல்லத்துரை, எழுத்தாளர், திருவண்ணாமலை, கே.வி.சைலஜா, எழுத்தாளர்/பதிப்பாளர், திருவண்ணாமலை, கே.வி. ஜெயஸ்ரீ, எழுத்தாளர், திருவண்ணாமலை, .முத்துகிருஷ்ணன், எழுத்தாளர், மதுரை, கடற்கரை, கவிஞர்/பதிப்பாளர், சென்னை, ஃபிர்தௌஸ் ராஜகுமாரன், எழுத்தாளர், கோவை, தமயந்தி, எழுத்தாளர், சென்னை, நவீன், திரைப்பட இடக்குனர், சென்னை, பிரின்ஸ் என்னாரெசு பெரியார், திரைப்பட இயக்குனர், சென்னை, பாலசுப்பிரமணியம் பொன்ராஜ், எழுத்தாளர், சென்னை, நிழல் திருநாவுக்கரசு, எழுத்தாளர்/இதழாசிரியர், சென்னை, ராஜ்முருகன், திரைப்பட இயக்குனர், சென்னை, புகழேந்தி, ஓவியர், சென்னை, ட்ராட்ஸ்கி மருது, ஓவியர், சென்னை, ரோகிணி, நடிகை, சென்னை, ஸ்டாலின் ராஜாங்கம், எழுத்தாளர், மதுரை, கரிகாலன், கவிஞர், விருதாசலம்,

தமிழ்ச்செல்வி,ஏழுத்தாளர்,விருத்தாசலம், ,வெண்ணிலா, கவிஞர், வந்தவாசி, பாரதி கிருஷ்ணகுமார், இயக்குனர், சென்னை, யாழினி முனுசாமி, எழுத்தாளர், சென்னை, பி.ஜி. சரவணன், கவிஞர், மதுரை, மீனா கந்தசாமி, எழுத்தாளர், சென்னை, கோவி லெனின், பத்திரிகையாளர் , சென்னை, புதிய மாதவி, எழுத்தாளர் மும்பை, கண்மணி ராஜா முகமது, திரைத்துறை, சென்னை,காலபைரவன், எழுத்தாளர், விழுப்புரம், சீனு இராமசாமி, திரைப்பட இயக்குனர், சென்னை, நாச்சியாள் காந்தி, ஊடகவியலாளர், சென்னை, வெற்றிவேல், ஆவணப்பட இயக்குநர், சென்னை, நறுமுகை தேவி, கவிஞர், கோவை, ஏகாதேசி, பாடலாசிரியர், சென்னை, ஶ்ரீஜித், அரங்கக் கலைஞர், சென்னை. லிவிங்ஸ்ஐல் வித்யா, அரங்கக் கலைஞர், சென்னை, மு.வி.நந்தினி, இதழாளர், சென்னை,


3 comments:

  1. நண்பரே,

    இதைப் படித்தபின் திரையரங்கிலிருந்து வெளியே வருபவர்கள் ச்ச இந்தப்படம் செம போரு என்று சொல்வது போன்ற எண்ணம் ஏற்பட்டது.

    ஆளுகின்ற அரசை தங்கள் ஓட்டுக்களைக் காட்டி ஒரு மதத்தினர் பணியச் செய்வது மதவாதம் இல்லை என்பது உங்கள் கருத்தானால் எனது ஓட்டு காவி இந்து மதவாதி மோடிக்கே.

    கோபாலன்

    ReplyDelete
  2. கோபாலன், வழக்கம் போல நல்லா காமெடி பண்றீங்க.
    அரசை கையில் வைத்துக் கொண்டு ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களை துன்புறுத்துவது, அரசை பெற வேண்டும் என்பதற்காக மத வெறியை தூண்டுவது ஆகியவை நீங்கள் கடைபிடிக்கும் மதவாதம்.
    ஆமாம் நீங்க என்னமோ காவிக்கூட்டம் இல்லை என்பது போலவே எழுதறீங்களே, நல்ல தந்திரம் சார். தைரியமா சொல்லுங்களேன். காவி கோபாலனின் ஓட்டு காவி மோடிக்கு என்று

    ReplyDelete
  3. மதிப்பிற்குரிய திரு ராமன் அவர்களுக்கு வணக்கம். தங்களின் வலையில் இட்டுள்ள இந்த அருமையான பதிவை எனது வலையில் - தங்களுக்கு நன்றி தெரிவித்து, தங்களின் இந்தப் பக்க இணைப்பையும் தந்து- வெளியிட்டிருக்கிறேன். எத்தனை சூப்பர் ஸ்டார்கள் ஆதரவுதந்தாலும் மக்களின் மனச்சாட்சியான எழுத்தாளர்களின் கருத்தே முக்கியமானது என்பதைத் தமிழகம் உறுதிசெய்யும். நன்றி.
    இணைப்பு - http://valarumkavithai.blogspot.in/2014/04/blog-post_17.html#more

    ReplyDelete