Thursday, April 10, 2014

ஜூனியர் விகடன் அணைக்கிறது, ஆனந்த விகடனோ???

விகடன் குழுமத்தின் இரு பத்திரிக்கைகளுக்குள் ஏன் இந்த
முரண்பாடு?


நரேந்திர மோடியின் நற்குணங்கள் என்று  பெயர் கொடுக்காமல்
போனாலும் அவரின் திறமைகளை(?????) தமிழர்களுக்குச் 
சொல்லுவதற்காகவே குஜராத் சென்று வாராவாரம், இல்லையில்லை,
வாரம் இருமுறையாக பல வாரங்களாக மோடி பஜனையில் தன்னை
இணைத்துக் கொண்டிருக்கிறது ஜூனியர் விகடன். போனால் போகிறது
என்று வெள்ளெழுத்துக் கண்ணாடிக்குக் கூட தெரியாத பொடி 
எழுத்துக்களில் இரண்டு பெட்டிச் செய்திகளும் விமர்சனம் செய்து
தங்களின் நடுநிலையை நிரூபித்துக் கொள்ளும் ஜூனியர் விகடன்.

இன்று வெளி வந்த ஆனந்த விகடனில் உள்ள மோடியும் முகமுடியும்
கட்டுரையோ நரேந்திர மோடியை தோலுரித்துக் காட்டுகிறது. 
நரேந்திர மோடி பிரதமரானால் விபரீதம் என்று எச்சரிக்கை செய்கிறது.
அந்த மனிதனின் அத்தனை மோசமான அம்சங்களையும் அக்கட்டுரை
மிகத் தெளிவாக ஆணித்தரமாக சொல்கிறது.

இதில் மிகப் பெரிய கொடுமை என்னவென்றால் ஆனந்த விகடனில்
கட்டுரை எழுதியுள்ள ப.திருமாவேலன்தான் ஜூனியர் விகடன்
இதழின் ஆசிரியர்.

இப்போது விகடனிடம் நாம் கேட்க வேண்டியது ஒரே கேள்விதான்.

ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் இரண்டில்
உங்கள் முகம் எது> முகமூடி எது?

 

1 comment: