கடந்த
பதினைந்தாவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் செயல்பாடுகள் குறித்து
வாக்காளர்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில் மதிப்பெண் போட்டு
ஒரு இணையதளம் வெளியிட்டிருந்தது.
தொகுதிக்கு
ஐநூறு பேர் என ஐநூறு பேர் என்று எடுத்துள்ள இந்த கருத்துக் கணிப்பு எவ்வளவு தூரம்
சரியானது, உண்மை நிலவரத்தை பிரதிபலிக்கிறது என்று சொல்ல முடியாது. அதற்கு
முக்கியமான காரணம் அஞ்சா நெஞ்சன் அழகிரி வாங்கியுள்ள 5.60
மதிப்பெண்கள்தான்.
ஆனாலும் கூட மிக
மோசமான செயல்பாடுடைய பத்து மக்களவை உறுப்பினர்கள் என்ற பட்டியலைப் பார்க்கும்போது
பஞ்சாப்பின் வாக்காளர்கள் மீது பரிதாபமே ஏற்பட்டது.
ஏனென்றால்
பத்து மோசமான எம்.பிக்களில் ஆறு பேர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
இதோ
இவர்கள்தான் அந்த அரிய பெருமையைப் பெற்ற அறுவர்.
இதிலே உள்ள
சிறப்பம்சம் என்னவென்றால் காங்கிரஸ் கட்சி மூன்று பேரையும் அகாலி தளம்- பாஜக
கூட்டணி மூன்று பேரையும் அளித்து இருவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்
என்பதை நிரூபித்துள்ளதுதான்.
இவர்களில்
எத்தனை பேரை மீண்டும் பதினாறாவது மக்களவைக்கு அனுப்பி “நாங்க ரொம்ப ரொம்ப
நல்லவங்க” என்ற பெருமையை எந்தெந்த தொகுதி வாக்காளர்கள் தட்டிச் செல்லப்
போகிறார்களோ?
அடக் கொடுமையே! இவர்களை எல்லாம் எதற்கு தேர்ந்தெடுத்தனரோ மக்கள்?
ReplyDelete--- -- ஊருல ---- -- புள்ள நாட்டாமை என்பது எல்லோரும் அறிந்த விஷயம்தானே!...
ReplyDelete