Thursday, March 7, 2019

செருப்படியிலும் வித்தியாசமான கட்சிதான் . . .


உ.பி யில் நேற்று நடந்த செருப்படி சம்பவம் குறித்து எழுதாவிட்டால் தோஷம் வந்து விடுமோ என்ற அச்சத்தில்தான் இந்த பதிவை எழுதுகிறேன்.

உத்தரபிரதேச மாநிலத்தின் பாஜக எம்.பி யான ஷரத் திரிபாதி, அதே பாஜக கட்சியின் எம்.எல்.ஏ வான ராகேஷ் சிங் என்பவரை செருப்பால் அடித்த காட்சியின் காணொளி கீழே உள்ளது. 

மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் நடந்த தரமான சம்பவத்தை அவசியம் பார்த்து ரசியுங்கள்.


அடிக்கல்லில் யார் பெயர் வைப்பது,
பேனரில் ஏன் பெயரில்லை

போன்ற மக்கள் பிரச்சினைகளுக்கு எப்படி தீர்வு காணுவது என்பதற்காகத்தான் இந்த கடுமையான துவந்த யுத்தம் நடந்துள்ளது.

மற்ற முதலாளித்துவ கட்சிகளில் கூட இப்படிப்பட்ட சண்டைகள் நடந்துள்ளது. 

தலைவர்கள் உசுப்பேத்தி விட தொண்டர்கள் சண்டை போடுவார்கள். 

ஆனாலும் பாஜக வித்தியாசமான கட்சியல்லவா?

அதனால்தான்

இங்கே தலைவர்களே செருப்பாலடித்துக் கொள்கிறார்கள்.


No comments:

Post a Comment