Thursday, March 14, 2019

நிறுத்திய நாள் இன்று




அவர் சிந்திப்பதை
நிறுத்திக் கொண்ட
நாள் இன்று.

எல்லாம் விதியின் விளைவென்று
நொந்து கிடந்த மனிதருக்கு
அந்த விதியின் பின்னே இருக்கும்
சதி பற்றி சிந்திக்க
கற்றுத் தந்த சிந்தனையாளர்.

அடிமைச் சங்கிலியை அறுத்தெறிய
பாட்டாளி வர்க்கத்திற்கு
மூலதனம் எனும் நூலை
ஆயுதமாய் அளித்தவர்.

வெறும் சொல்லோடு நிற்காமல்
உழைப்பவர்களை ஒன்றிணைக்க
முதல் அகிலம் கண்டவர்.

நாடு நாடாக துரத்தப்பட்டவர்,
நாடுகள் தோறும்
இன்று நாடப்படுபவர்.

கம்யூனிச பூதம்
அச்சுறுத்துகிறதென
அரசுகள் புலம்புவதாய்
அவர் அன்று சொன்னார்.
அந்த அச்சம் தொடர்கிறது.
அவர் தந்த தத்துவத்தால்

அவர் காலமாகவில்லை.
காலத்தை வென்ற
காவிய மனிதராய்
வாழ்ந்து கொண்டிருப்பவர்.

மாற்றம் மட்டுமே நிலையானதென்றார்.
காரல் மார்க்ஸின் புகழும்தான்.

No comments:

Post a Comment