நேற்று யூட்யூபில் ஏதோ தேடும் போது கிடைத்தது கீழேயுள்ள இரண்டு பொக்கிஷங்கள்
பொக்கிஷம் 1
பொக்கிஷம் 2
திருவையாறு தியாகராஜர் விழாவில் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் கச்சேரிக்கு பக்கவாத்தியம் வாசித்த இரு மேதைகளான தபேலா ஸாகிர் ஹூசைனும் தவில் ஹரித்வாரமங்கலம் ஏ.கே.பழனிவேலும் நடத்திய ஜூகல் பந்தி இசை விருந்துதான் அந்த இரண்டு பொக்கிஷங்களிலும் உள்ளது. நேற்று மட்டுமே இரண்டு முறை அந்த இசை விருந்தை பருகினேன்.
ராமரை புகழ்ந்து தெலுங்கில் கீர்த்தனைகள் எழுதிய தியாகராஜரின் ஆராதனை விழாவில் மேற்கத்திய வாத்தியமான மாண்டலினில் அக்கீர்த்தனைகளை ஸ்ரீனிவாஸ் இசைக்க, இஸ்லாமியரான ஸாகிர் ஹூசைன் வடக்கத்திய வாத்தியமான தபேலாவில் இசைத்திட, தமிழ்நாட்டுக் கலைஞரான ஹரித்வாரமங்கலம் ஏ.கே.பழனிவேல், தமிழிசை வாத்தியமான தவில் வாசிப்பது
அழகு, அழகு அழகோ அழகு !!!!
இந்தியாவின் பன்முகத்தன்மை எவ்வளவு அருமையாக வெளிப்படுகிறது!
இதுதானே இந்தியாவின் சிறப்பு!
இதுதானே இந்தியாவின் ஒற்றுமை!
இதுதானே இந்தியாவின் மத நல்லிணக்கம்!
இதை சிதைப்பதையும் சீரழிப்பதையுமே இலக்காகக் கொண்ட பாரதீய ஜனதாவையும் மோடியையும் ஆதரிப்பவர்களை என்ன சொல்வது!
எது சொன்னாலும் புரிந்து கொள்ளும் மன நிலையில் இல்லாத ஆட்களிடம்
புரிந்து கொள்ளுங்கள், இதுதான் இந்தியா
என்பதையாவது சொல்லி வைப்போம் . . .
பிகு:
இரண்டாவது காணொளியில் பத்தாவது நிமிடத்திலிருந்து பனிரெண்டாவது நிமிடம் வரை பார்வையாளர்கள் பகுதியை உன்னிப்பாக கவனியுங்கள். சுவாரஸ்யமான காட்சியை தவற விடாதீர்கள்
15 நாள் இருக்கும்போதே இப்படி ஏமாற்றி விட்டீர்களே தோழர்.. என்னவோ ஏதோ என்று கற்பனை பறக்க 2ம் சுட்டிக்கு சென்று நேராக 10 நிமிடத்திலிருந்து ஓட விட்டுப்பார்ததால்...
ReplyDeleteIts really a nice twist..
Expecting more comraade...
அந்த் குழந்தை தகப்பனின் தலையை தபேலாவாக மாற்றியது அருமை
ReplyDeleteகுழந்தையின் தபேலா வாசிப்பு ஆஹா
ReplyDelete