Tuesday, March 5, 2019

இவந்தாய்யா யோக்கியன் . . .



அபிநந்தன் பாதுகாப்பாக திரும்பி வந்தது குறித்த ஒரு சங்கியின் ட்விட்டர் பதிவு இது. அபிநந்தனை வைத்து போருக்குப் போகலாம் என்று உசுப்பேத்திக் கொண்டிருந்த மாலன் உள்ளிட்ட  பலர் அவர் திரும்பி வந்ததும்  கள்ள மௌனம் சாதித்தார்கள்.

அவர்கள் மனதில் இருந்ததை வெளிப்படையாக பேசிய இந்த சங்கியின் நேர்மை பாராட்டுக்குரியது.

அந்தாள் சொன்னதை தமிழில் சொல்கிறேன்.

"அபிநந்தனின் இடத்தில் நான் இருந்திருந்தால் என் துப்பாக்கியால் நானே என்னை சுட்டுக் கொண்டு இறந்திருப்பேன். எதிரியின் கருணையால் உயிரோடு திரும்புவதைக் காட்டிலும் இறந்து போவதே மேல்.  வருந்துகிறேன் அபிநந்தன், நீங்கள் சக்தி மிக்க தலைவரை தழுவிக் கொண்டு விட்டீர்கள். உங்களை நினைத்து நான் பெருமிதப்படவில்லை"

பிகு 1

சக்தி மிக்க தலைவரை சங்கடப்படுத்தி விட்டீர்கள் என்றுதான் அந்தாள் எழுத நினைத்திருப்பார் என்று நினைக்கிறேன். Embarrassed என்று எழுதுவதற்குப் பதிலாக Embraced என்று எழுதியதால் அது தழுவிக் கொண்டதாகி விட்டது.

பிகு 2

அபிநந்தன் விடுதலைக்கு எதிரியின் கருணைதான் காரணம் என்று ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இம்ரான் கானோ அல்லது பாகிஸ்தானின் அதிகாரிகள் யாருமோ இந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை. Gesture of Peace,  அமைதியின் சமிஞ்சையாக விடுவிக்கிறோம் என்ற வார்த்தையைத்தான் அவர்கள் பயன்படுத்தினார்கள். அப்படி என்றால் ராணுவ வீரர்களை இழிவு படுத்துவது யார்?



2 comments:

  1. மோடி முதல் அத்தனை பேரும் அபிநந்தனை வைத்து அரசியல் செய்ய பார்த்தார்கள். அவர் திரும்பி வந்ததில் அத்தனை எரிச்சல்

    ReplyDelete
  2. //நீங்கள் சக்தி மிக்க தலைவரை தழுவிக் கொண்டு விட்டீர்கள்// Good Comedy

    ReplyDelete