Saturday, March 16, 2019

பாண்டியராஜனுக்கு பளீர் அடி




டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்ணை கன்னத்திலும் காதிலும் காட்டுத்தனமாக  அறைந்து அவரது கேட்கும் திறனை இழக்க வைத்த எஸ்.பி பாண்டியராஜனை உயர் நீதி மன்றம் பளீரென்று அடித்திருப்பது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

பொள்ளாச்சி கொடுமைகளில் அரசியல்வாதிகள் யாருக்கும் தொடர்பில்லை என்று “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்று முந்திக் கொண்டு சொன்ன போதே அந்த மனிதன் விலை போனது புரிந்தது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையும் விபரங்களையும் ஊடகத்திற்கு அளித்த போதே அது உறுதியானது.

வேறு எந்த பாதிக்கப்பட்ட பெண்ணும் புகார் கொடுக்க முன்வராமல் தடுக்கிற மட்டமான உத்தி என்பதை உயர் நீதிமன்றம் அதிர்ஷ்டவசமாக புரிந்து கொண்டு விட்டது.

அதனால்தான் பாண்டியராஜனை கண்டித்துள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லியுள்ளது. இருபத்தி ஐந்து லட்ச ரூபாய் இழப்பீடும் தரச் சொல்லியுள்ளது.

அந்த பணத்தை அரசு செலுத்தக் கூடாது. பாண்டியராஜனுக்கு கட்டாய ஓய்வு கொடுத்து வருகிற கிராஜூவிட்டி, பென்ஷன் கம்யூடேஷன், ஈட்டிய விடுப்புக் காசு ஆகியவற்றிலிருந்து பிடித்தம் செய்து செலுத்த வேண்டும்.

அந்த அடி இன்னும் அழுத்தமாக இருக்கும்

2 comments:

  1. கட்டாய ஓய்வு அவசியமில்லை. டிஸ்மிஸ் செய்யனும்

    ReplyDelete
  2. அப்படி செய்தாலும் அவனுக்கு அதை விட பெரிய பணம் அரசியல்வாதிகள் தருவார்கள்.

    இருந்தாலும், இவர்களுக்கெல்லாம் அம்மா,மனைவி,மகள்,சொந்தம் என்று யாரும் இல்லையா..,,இப்படி அநீதி செய்து பிழைப்பது தவறு என்று சொல்லவில்லையா?
    அதுவும் பெண்கள் விசயத்தில் சமரசமே கூடாது என்று சொல்லவில்லை எனில் அவர்கள் இருந்து தின்று உயிர் வாழ்வது எவ்வளவு இழிவானது.

    ReplyDelete