நரேந்திர மோடி பற்றி ஒரு சினிமா வரப் போகிறது. அதன் ட்ரெய்லர் பார்க்கிற போதே மிகவும் கொடுமையாக இருந்தது. ஐந்தாண்டுகளாக அனுபவிக்கும் கொடுமையை மூன்று மணி நேர கொடுமையாக சுருக்கி தரப் போகிறார்கள் போல.
அது ஒரு புறம் இருக்கட்டும். பாஜக ஆட்களைத்தவிர வேறு யாரும் அந்த படத்தை தியேட்டருக்குப் போய் பார்க்கப் போவதில்லை.
இந்த பதிவு அதைப் பற்றியதல்ல
அந்த திரைப்படத்தின் விளம்பரத்தில் பாடலாசிரியர்கள் என்பதில் பிரபல இந்தி பாடலாசிரியர் திரு ஜாவேத் அக்தர் பெயர் இடம் பெற்றுள்ளது. மோடி ஆட்சியை கடுமையாக விமர்சித்து செயல்பட்டு வருபவர் அவர். தான் அந்த படத்திற்கு எந்த பாடலும் எழுதாத போது விளம்பரத்தில் தன் பெயரை இணைத்ததை அவர் கண்டித்துள்ளார்.
ஆனால் படக்குழு மோடியைப் போலவே கள்ள மௌனம் சாதிக்கிறது.
மோடியைப் போலவே மோடியைப் பற்றி படமெடுப்பவர்களும் மோசடிப் பேர்வழிகள்தான் போல.
இரண்டு மோசடிகள் இதில் உள்ளது.
பாடலெழுதாத ஒருவரின் பெயரை விளம்பரத்தில் சேர்த்தது முதல் மோசடி.
மோடியை விமர்சிக்கிற ஒருவர் காசுக்காக மோடி பற்றிய படத்தில் பாட்டு எழுதியுள்ளார் என்ற தோற்றத்தை உருவாக்குவது இரண்டாவது மோசடி.
மோடி = மோசடி
No comments:
Post a Comment