Wednesday, March 20, 2019

கொலைகார சாமியாரே, பொய் சொல்லாதே


தான் ஆட்சிக்கு வந்த இரண்டு வருடங்களில் உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு கலவரம் கூட நடக்கவில்லை. அவ்வளவு அமைதியான மாநிலமாக உபி யை நான் மாற்றி விட்டேன் என்று மொட்டைச் சாமியார் நேற்று தம்பட்டம் அடித்துக் கொண்டுள்ளார்.

"கலவரங்களை தூண்டுவதே நீதான். நீ ஆட்சியில் இருக்கும் போது எப்படி ஐயா கலவரம் நடக்கும்?" 

என்று கேட்க தோன்றியது. 

ஆனால் கடந்த வருட இறுதியில் மாட்டை முன் வைத்து நடந்த கலவரத்தின் பெயரில் சுபோத் குமார் சிங் என்ற போலீஸ் இன்ஸ்பெக்டரை காவிகள் கொலை செய்தது நினைவுக்கு வந்தது. புலந்தர்ஷரில் நடந்தது கலவரம் கிடையாதா என்று கேட்க நினைத்த போதே இன்னும் சில கலவரங்களும் நினைவுக்கு வந்து விட்டது. 

கசன்கஞ்ச்  என்ற ஊரில் ஒரு கலவரம், சஹரன்பூர் என்ற ஊரில் ஒரு கலவரம், இவையெல்லாம் காவிகள் மொட்டைச் சாமியார் ஆட்சியில் நடத்திய பெருங்கலவரங்கள். 

கீழே உள்ள படத்தை பார்த்தாலேயே இந்த மூன்று கலவரங்களின் தீவிரம் தெரியும்.



கடந்த வருடம் மக்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மோடி அமைச்சரவையின் உள்துறை இணை அமைச்சராக உள்ள ஹன்ஸ்ராஜ் ஆஹிர் என்பவர் சொன்ன பதில் ஒன்று கீழே உள்ளது. 

"2017 ம் ஆண்டில் இந்தியா முழுதும் 822 கலவரங்கள் நடந்துள்ளது. அதில் 195 கலவரங்கள் உத்திர பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. அந்த ஒரு ஆண்டில் மட்டும் உ.பி யில் நடந்த கலவரங்களில் 44 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 542 பேர் படு காயம் அடைந்துள்ளனர்"

மத்தியரசு கொடுத்துள்ள புள்ளி விபரப்படியே இந்தியாவில் நடைபெற்ற கலவரங்களில் கிட்டத்தட்ட இருபத்தி நான்கு சதவிகிதம் மொட்டைச் சாமியார் ஆட்சியில்தான் நடந்துள்ளது. 

மாட்டுக்காக உருகுகிற இந்த கொலைகாரச் சாமியாரின் ஆட்சியில்தான் ஆக்ஸிஜன் இல்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் சாகடிக்கப்பட்டார்கள் என்பதை நம்மால் மறந்திட முடியுமா?

கேவலமான, கேடு கெட்ட ஆட்சியை நடத்தும் போதே இந்த ஆளின் பேச்சுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை.

இந்தாள் மட்டுமா, பாஜகவில இருக்கிற எல்லா எழவெடுத்தவனுங்களும் மோடியிலிருந்து உபயோகமத்த வெட்டி மெம்பர்ங்க வரைக்கும்  ஒரே மாதிரி திமிராத்தானே பேசறாங்க!

7 comments:

  1. அப்படி போட்டுத் தாக்குங்க

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. கொலைகாரன் ஆதித்யநாத்

    ReplyDelete
  7. This up cm is coming to dharmapuri for mp election campaign .

    ReplyDelete