Tuesday, March 19, 2019

போராட்டத்திற்கு ஆட்டோ இலவசம்


கட்டணம் மறுத்த அந்த ஆட்டோ ஓட்டுனர்



எங்கள் வேலூர் கிளையின் செயலாளர் தோழர் வி.திருமாவளவன் எங்கள் கோட்டப் பொருளாளர் தோழர் எல்.குமாரிடம்  பகிர்ந்து கொண்ட சம்பவம் இது. நெகிழ்ச்சியூட்டும் அச்சம்பவத்தை இங்கே பகிர்ந்து கொள்வது அவசியம் என்று கருதுகிறேன்.

பொள்ளாச்சி பாலியல் பயங்கரம் குறித்து கடந்த செவ்வாய் கிழமையன்று எங்கள் கோட்ட மகளிர் துணைக்குழு சார்பில் அனைத்து கிளைகளிலும் நடத்தினோம். வேலூர் மையத்தில் உள்ள இரண்டு கிளைகள் மற்றும் குழுக்காப்பீட்டுப் பிரிவு மற்றும் கோட்ட அலுவலக் கிளை இணைந்து கூட்டு ஆர்ப்பாட்டமாக கோட்ட அலுவலகத்தில் நடத்தினோம்.

ஆர்ப்பாட்டம் முடிந்து வேலூர் கிளையிலிருந்து வந்த தோழர்கள் ஆட்டோவில் அவர்களுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது “என்ன சார் இங்கே இவ்வளவு கூட்டம்?” என்று ஆட்டோ ஓட்டுனர் கேட்க, தோழர் திருமாவளவனும் ஆர்ப்பாட்டம் பற்றிய விபரங்களை கூறி உள்ளார். பொள்ளாச்சி சம்பவங்களைப் பற்றியும் இருவரும் பயணத்தின் போது பேசிக் கொண்டே சென்றுள்ளார்கள்.

இறுதியாக அவர்கள் அலுவலகம் வந்தடைந்து ஆட்டோவிற்கு பேசிய கட்டணத்தை கொடுத்த போது

“பொள்ளாச்சி விஷயம் பற்றி கேட்கும் போது மனசு ரொம்ப சங்கடமா இருக்கு, ஏதாவது பண்ணனும் போல இருக்கு, என்னால தனியா எதுவும் செய்ய முடியாது. உங்க சங்கம் செய்யறது நல்ல விஷயம். ஏதோ என்னால் முடிஞ்சது, உங்க கிட்ட ஆட்டோ சார்ஜ் வாங்காம இருக்கறேன்”

என்று கட்டணம் வாங்க மறுத்துள்ளார். கட்டணத்தை கண்டிப்பாக வாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் என்று  தோழர்கள் அழுத்தமாக வலியுறுத்தியும் அவர் ஒப்புக் கொள்ளவே இல்லை. கடைசியில் ஒரு அடையாளபூர்வமாக பத்து ரூபாய் மட்டுமே வாங்கிக் கொண்டுள்ளார். அந்த பயணத்திற்கு வழக்கமான கட்டணம் நூற்றி இருபது ரூபாய்.

இப்படிப்பட்ட எளிய மனிதர்களின் சின்னஞ்சிறு செயல்கள்தான் மனிதர்கள் மீதான நம்பிக்கையை பெரிய அளவில் தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.

2 comments:

  1. பொதுமகன் - என்ன தோழரே தேர்தலுக்கு 20 கோடி செலவு பண்ணனுமாமே

    கம்யூனிச வேட்பாளர் - TEA வாங்கிட்டு வாங்க தோழர் .. அங்கே இருந்து பேசுவோம்

    WHATSAPP இல் வந்தது

    தேவநேசன்

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete