பாஜக ஊழல் - கடலை மிட்டாய் டூ மொபைல்
பங்கஜா முண்டே -மகாராஷ்டிர மாநிலத்தின் சமூக நல மற்றும் குழந்தைகள் நல அமைச்சர்.
பங்கஜா முண்டே -மகாராஷ்டிர மாநிலத்தின் சமூக நல மற்றும் குழந்தைகள் நல அமைச்சர்.
பாஜகவின் அந்த கால அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மகள்.
அந்த மாநில சத்துணவுத் திட்டத்தில் கடலை மிட்டாய் வாங்குவதில் ஊழல் செய்த புகழ் பெற்றவர்.
இப்போது அவரது ஊழல் புகழ் கடலை மிட்டாயிலிருந்து மொபைல் போன் வாங்குவதில் ஊழல் செய்ததாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது.
ஆமாம்.
அங்கன்வாடி ஊழியர்களுக்கு வழங்குவதற்காக ஒரு லட்சத்து இரண்டாயிரம் மொபைல் போன்கள் வாங்கப்பட்டுள்ளது. ஆறாயிரத்திலிருந்து ஆறாயிரத்து நானூறு ரூபாய்க்கு கிடைக்கும் பானாசானிக் மாடல் போனிற்கு ரூபாய் 8,777 கொடுத்துள்ளார்.
ஒரு போனிற்கு 2,377 ரூபாய் என்றால் ஒரு லட்சத்து இரண்டாயிரம் ரூபாய்க்கு இருபத்தி நான்கு கோடியே நாற்பத்தி இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் வருகிறது.
பொதுவாக இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் வாங்கினால் தள்ளுபடி தருவார்களே தவிர கூடுதல் ரூபாய்க்கு எல்லாம் வாங்க மாட்டார்கள்.
அப்படியென்றால் இதை ஊழல் என்று சொல்லாமல் வேறெப்படி அழைப்பது?
ஆனால் இதற்கு வழிகாட்டி மோடிதான்.
ரபேல் ஊழல்தான் எடுத்துக்காட்டு
தலைவர் வழியில் தொண்டர்கள் . . .
ஆனால் இதற்கு வழிகாட்டி மோடிதான்.
ரபேல் ஊழல்தான் எடுத்துக்காட்டு
தலைவர் வழியில் தொண்டர்கள் . . .
No comments:
Post a Comment