Saturday, March 9, 2019

வெட்கமே கிடையாதா மோடி?



அலகாபாத்திலே துப்புறவுத் தொழிலாளர்களின் கால்களைக் கழுவி நாடகம் போட்ட மோடியே,

உமது தொகுதி வாரணாசியில் விஸ்வநாதர் கோயிலில் இருந்து கங்கைக்கு நேரடியாக பாதை போடுவதற்க்கு என நாற்பது தலித் குடும்பங்களை எந்த மாற்று ஏற்பாடுகளும் இல்லாமல் அகற்ற முனைகிறீர்களே இது நியாயமா?

உங்களால் வாழ்விழக்கும் குடும்பங்கள் உங்களை சந்தித்து ஒரு மனு கூட அளிக்கக் கூடாது என்று அவர்களை வீட்டிற்குள்ளேயே பூட்டி வைத்து அவர்கள் வீடுகளையே சிறையாக மாற்றி வைத்துள்ளார்களே, வெட்கமாக இல்லையா?

நீரெல்லாம் ஒரு பிரதமர்!
நீர் மீண்டும் வர வேண்டுமென்று ஒரு கூட்டம் பொய்களைச் சொல்லிக் கொண்டு அலைகிறது. 
வாரணாசியில் வந்து உம்மை போட்டியிடச் சொல்லி கங்கை அன்னை அழைத்தாராம், நீரும் போட்டியிட்டீராம்.

இன்று நீர் செய்த இந்த பாவத்திற்கு 
ஆயிரம் முறை கங்கையில் குளித்தாலும் உமக்கு விமோசனம் கிடையாது. 
ஆயிரம் கங்கையில் குளித்தாலும் விமோசனம் கிடையாது.

மனிதராக மதிக்கக் கூட தகுதியற்ற நீரெல்லாம் பிரதமராம்


2 comments:

  1. All these things should be remembered and effect should be in elections.

    ReplyDelete

  2. வெட்கமா மோடிக்கா அப்படின்னா கிலோ என்ன விலை என்று கேட்பார்...அவரை பிரதமராக் தேர்ந்தெடுத்த மக்களிடம்தான் வெட்கம் என்றால் என்ன வென்று கேட்க வேண்டும் இன்னும் அவரை ஆதரிக்கும் சங்கிகளிடமும் வெட்கம் என்னவென்றால் ஏதாவது தெரியுமா என்று கேட்க வேண்டும் மானம் சூடு சுரணை இல்லாதவர்கள்தான் அவரை இன்னும் ஆதரிப்பார்கள்

    ReplyDelete