கற்றல்
குறைபாடுள்ள ( Dyslexia) குழந்தைகள் தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் மோடி கலந்து கொள்கிறார்.
அக்குழந்தைகளுக்கு
பயனளிக்கக் கூடிய ஒரு மென் பொருள் ஒன்றை கண்டு பிடித்துள்ளதாக ஒரு மாணவி அங்கே சொல்ல
“இது
நாற்பது ,நாற்பத்தி ஐந்து வயது குழந்தைகளுக்கும் பயனளிக்குமா?”
என்று
இடைமறித்து வெடிச்சிரிப்புடன் அவருக்கே உண்டான மோசமான உடல் மொழியோடு வினவுகிறார் மோடி.
அத்தோடு
நிறுத்திக் கொள்ளவில்லை அவர்.
“குறைபாடுள்ள
வளர்ந்த குழந்தைகளுக்கு மட்டுமல்லாது அவர்களின் அம்மாவும் பயனடைவார்கள் அல்லவா?”
என்று
மீண்டும் அதே வெடிச்சிரிப்போடு கேட்டுள்ளார்.
மோடி
எந்த நாற்பத்தி ஐந்து வயது குழந்தையை, அம்மாவை சொல்கிறார் என்று நான் விளக்க வேண்டிய
அவசியமில்லை.
உங்களின்
கேவலமான அரசியலை எங்கே பயன்படுத்துவது என்ற விவஸ்தை கிடையாதா மோடி?
உங்கள்
அரசியல் எதிரிகளை நையாண்டி செய்ய உங்களுக்கு கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகள்தான்
கிடைத்தார்களா?
அவர்களைப்
பற்றி பேசுகையில் வெடிச்சிரிப்பும் ஆபாச உடல் மொழியும் தேவைதானா?
பிரதமர்
என்ற பதவிக்கு கொஞ்சமும் தகுதியற்ற தரங்கெட்ட மனிதன் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறீர்.
ஓரிரு
வருடங்களுக்கு முன்பாக இப்படித்தான் நடிகர் ராதாரவி கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை
நக்கலடித்தார்.
ராதாரவியையே நல்லவராக்கி விட்டார் மோடி
மோடியின் மட்டமான நகைச்சுவைக்கு சிரிக்கிறார்களே, ஐ.ஐ.டி மாணவர்கள், அவர்களை என்ன சொல்வது!
No comments:
Post a Comment